Monday, December 11, 2017

பாரதம் காத்த பாரதி




தேனுகரும் வண்டு
ரீங்காரம் கண்டு
அஞ்சாது மலர்கள்




மாறாக வென்று
வண்டதனை கவர்ந்து
தன்னினம் பெருக்கும்

முட்கள் கொண்ட பாதையும்
பூக்காடே என நினைத்தால்
துக்கம் வரும் போதெல்லாம்
மாமருந்தாய் மாறிடுமே!

இனியும் தேங்காது நாளும்
படித்திடுவோம்

மகாகவியின் பாடல்களை
நதிநீராய் ஓடிடுவோம்
வாழ்வதனை வென்றிடவே...!


பன்னிசைப் புலவரெல்லாம்
பொருள் பெறவே
கவிபாட...

மகாகவி பாரதியோ
தேசநலன் காத்திட்டார்
காலமெல்லாம் கவி பாடி


வீரம் செறிந்த வார்த்தைகளால்

விவேகமதனை வார்த்திடுவார்

பாமரனும் புரிந்திடவே
கவிச்சிற்பம் செதுக்கிடுவார்...


குழந்தைக்கோர் பாப்பா பாட்டு
பறவைக்கோர் குயில் பாட்டு
காவியத்திற்கோர் பாஞ்சாலி சபதம்
சுதந்திரத்திற்கோர் விடுதலை வேட்கை
பெண்களுக்கோர் கும்மிப்பாட்டு

இன்னிசைக்கோர் வீணை பாட்டு
காதலுக்கோர் கண்ணன் பாட்டு

வாராமல் வந்த
வராக நதியோ...?
தேயாது நின்ற
தனிப்பெருஞ் சுடரோ?

தீயை உள்ளுக்குள் வைத்தாய்
தீமைதனை பொசுக்கிடவே...

திண்ணிய நெஞ்சம்
நேர்கொண்ட பார்வை
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை
ரௌத்திரம் பழகு

எமக்கு தொழில் கவிதை
நாட்டிற்காக உழைத்தல்
இமைப்பொழுதும்
சோராதிருத்தல்...

என்று தணியும் இந்த
சுதந்திர தாகம்...

என்று மடியும் இந்த
அடிமையின் மோகம்..?

இவையெல்லாம்....
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை...

இளைஞர்களுக்கும் சரி...

புதுக்கவிகளுக்கும்
சரி...

நீ...ஒரு
சிம்ம சொப்பனம்தான்...!


வாழ்க்கையின் பிசிறுகளை
ஊதிவிட்டு புறந்தள்ளியவன் நீ..!

உருகாத கல்நெஞ்சையும்
உருகவைத்து
ஒட்டியவன் நீ..!

இனி உன் பாட்டை
(சு)வாசிப்போரெல்லாம்....

பிறவிப்பயன் பெற்றவரே...

தளராத ஆற்றலை_உன் கவி

வலிந்து ஊட்டும்
வாஞ்சையுடன்
நீ (நாம்)படித்தால்..!


இக்கவிதை
மகாகவிக்கு
சமர்ப்பணம்.


அன்புடன்

பாரதி சங்கர்
முக்காணி.

0 Responses to “பாரதம் காத்த பாரதி”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby