Friday, September 25, 2020

பாடும் நிலாவுக்கு கவிதாஞ்சலி

Friday, September 25, 2020 by பாரதிசங்கர் · 0

 இளைய நிலாவை பொழிந்த

பாடும் நிலா மறைந்ததேனோ..?


உதய கீதம் பாடி

உயிர்களைத் தொட்டாய்...



வானுயர்ந்த சோலையெல்லாம்

நீ வானம்பாடியாய் பாடி திரிந்தாய்



உன் மந்திரக்குரலால் நீ

மருத்துவம் செய்தாய்...


செவி குளிரச் செய்தது 

உன் இன்னிசை கான மழை..!


தமிழ் வானில் நீ 

சிகரம் தொட்டாய்....


கேளடி கண்மணி என

தொட்டில் குழந்தைகளுக்கு

தாலாட்டு பாடினாய்...


மண்ணில் நீ உச்சம் தொட

ஏதுமில்லை என்பதாலேயே நீ

விண்ணுக்குச் சென்று விட்டாயோ?


சத்தம் இல்லாத தனிமை கேட்டதாலேயே

எங்களை விட்டு பிரிந்து சென்றாயோ...?


குரலரசா...சங்கீத ஜாதி முல்லையாய்

தவழ்ந்து மண்ணில் மணம் வீசினாயே...


உன் காந்தக்குரலை இன்னும்

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

இப்புவி உன்னை மறக்காது...


அதுவரை இசையாய் நீ

மலர்ந்து கொண்டே இருப்பாய்...!



- பாரதிசங்கர், முக்காணி


Sunday, July 12, 2020

தென்னக ஜேம்ஸ்பாண்டு

Sunday, July 12, 2020 by பாரதிசங்கர் · 0

313 திரைப்படங்கள்...சிஐடி சங்கர்...தென்னக ஜேம்ஸ்பாண்டு...வெள்ளிக்கிழமை நாயகர்...அதிரடியிலும்....குணசித்திர வேடங்களிலும் வெளுத்து வாங்குபவர்...தமிழ்சினிமாவில் மறக்க முடியாத மாமனிதர்....ஜெய்சங்கர்..
இவருக்கு  இன்று (ஜூலை 12) இவரது 83-வது பிறந்த நாள். தாய்மார்களின் பேராதரவுடன் மக்கள் கலைஞராக சினிமாவில் சக்கை போடு போட்டு ராஜாவாகத் திகழ்ந்த இவரைப் பற்றிய ருசிகரத் தகவல்கள்...

மேலும் படிக்க

Friday, January 25, 2019

Historical Drawings for Teachers Training students

Friday, January 25, 2019 by பாரதிசங்கர் · 0

Ambedkar

 vellesly

 Thippu sultan

 Veera Sivaji

under the sea

 Buddhar

 India map

Monday, January 14, 2019

பொங்கல் வாழ்த்துக்கள்

Monday, January 14, 2019 by பாரதிசங்கர் · 0


Wednesday, January 2, 2019

புத்தாண்டு வாழ்த்துகள்

Wednesday, January 2, 2019 by பாரதிசங்கர் · 0



Tuesday, December 4, 2018

திரும்புவோம் பழமைக்கே

Tuesday, December 4, 2018 by பாரதிசங்கர் · 0


தூய உள்ளம்
தூய இல்லம்
மண்வாசனை தரும் மழைநீர்
நெகிழி இல்லாமல்
நெகிழச் செய்யும் உறவுகள்

மேலும் படிக்க

Thursday, March 8, 2018

பெண்ணீயம் பேசுபவரா நீங்கள்?

Thursday, March 8, 2018 by பாரதிசங்கர் · 0

மார்ச் 8

உலக மகளிர் தினம்

சிறப்பு கட்டுரை


பெண்ணீயம் பேசுபவரா நீங்கள்?





- பாரதிசங்கர்


பெண்ணீயம் பேசுபவரா நீங்கள்? அப்படி என்றால் கண்டிப்பாக இந்த கட்டுரை யை நீங்கள் படிக்க வேண்டும்.


பெண்கள் வீட்டின் கண்கள் என்பார்கள். பெண் என்றால் பேயும் இரங்குமாம். அத்தகைய அற்புதமான குணம் படைத்தவள். ஆண்களை விட மனோசக்தி வாய்ந்த வள் என்பதாலேயே அவளை சக்தி என்ற பெயரில் கடவுளாக வழிபடுகின்றனர்.

பிறருக்கு உதவுவதில் தயாள குணம் கொண்ட நதி போன்ற வள் என்பதால் தான் நாம் நாட்டில் உள்ள நதிகளை கங்கை... காவிரி... கோதாவரி... சரஸ்வதி...நர்மதை... தாமிரவருணி என பெண்பால் பெயர் சூட்டி அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் படிக்க

All Rights Reserved saathiyam | Designed by Bobby