Friday, September 25, 2020

பாடும் நிலாவுக்கு கவிதாஞ்சலி

 இளைய நிலாவை பொழிந்த

பாடும் நிலா மறைந்ததேனோ..?


உதய கீதம் பாடி

உயிர்களைத் தொட்டாய்...



வானுயர்ந்த சோலையெல்லாம்

நீ வானம்பாடியாய் பாடி திரிந்தாய்



உன் மந்திரக்குரலால் நீ

மருத்துவம் செய்தாய்...


செவி குளிரச் செய்தது 

உன் இன்னிசை கான மழை..!


தமிழ் வானில் நீ 

சிகரம் தொட்டாய்....


கேளடி கண்மணி என

தொட்டில் குழந்தைகளுக்கு

தாலாட்டு பாடினாய்...


மண்ணில் நீ உச்சம் தொட

ஏதுமில்லை என்பதாலேயே நீ

விண்ணுக்குச் சென்று விட்டாயோ?


சத்தம் இல்லாத தனிமை கேட்டதாலேயே

எங்களை விட்டு பிரிந்து சென்றாயோ...?


குரலரசா...சங்கீத ஜாதி முல்லையாய்

தவழ்ந்து மண்ணில் மணம் வீசினாயே...


உன் காந்தக்குரலை இன்னும்

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்

இப்புவி உன்னை மறக்காது...


அதுவரை இசையாய் நீ

மலர்ந்து கொண்டே இருப்பாய்...!



- பாரதிசங்கர், முக்காணி


0 Responses to “பாடும் நிலாவுக்கு கவிதாஞ்சலி”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby