Monday, January 31, 2011
இசையால் உண்டாகும் இறையின்பம்
Do you like this story?
வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சுவாமி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஐஐடி வளாகத்தில் மகாத்மா காந்தியின் நினைவுதினமான ஜனவரி 30&ல் 5700 கர்நடாக இசைக்கலைஞர்களுடன் மாபெரும் நாத வைபவத்தை நடத்தினார்.
அகத்திலும், புறத்திலும் ஏற்படும் காலநிலை மாற்றங்களுக்கான எளிய தீர்வுகள் என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.
சகஸ்ரம் என்றால் மகத்தான என்று பொருள். 5 ஆயிரம் இசைக்கலைஞர்கள் பங்கு பெற்றிருப்பதால், இந்த நாத வைபவத்தை 5 சகஸ்ரம் என்று குறிப்பிடலாம்.
நாடிநரம்புகளை லயமாக்கிய நாதவைபவம்
சித்து விநாயகம் என்று ஆரம்பித்த முத்துசாமி தீட்சிதரின் ஆலாபனையில் கர்நாடக இசைக்கலைஞர்கள் கோரசாக பாடிய பாடல் பார்வையாளர்களை மெய்மறந்து அவர்களுடன் சேர்ந்து பாட வைத்தது. அதை அடுத்து தொடர்ந்தது பி.எஸ்.நாராயண சுவாமியின் அமிர்தவர்ஷினி பாடல். இந்த பாடல் உருவான கதை இதுதான்.
எட்டயபுரத்தில் வறண்ட பூமியைக் கண்ட முத்துசாமி தீட்சிதர், தனது வசீகர குரலால் அம்பிகையை அழைத்தார். அட்சய...அட்சய...என்று அவர் பாட பாட, மழை கொட்டி வறண்ட பூமியின் தாகத்தை தணித்தது. பூமியின் தாகம் தணிந்தும் கூட, மழை விட்டபாடில்லை. மக்கள் என்ன செய்வது என்று திகைத்த அதேநேரத்தில், ஸ்தம்பய...ஸ்தம்பய...என்று அதே கானகுரல் மீண்டும் சங்கீதம் பாட....என்ன அதிசயம்...மழை நின்றது. இந்த பாடலைத் தான் அமிர்தவர்ஷினியால் நாதவைபவம் நம்மை இசைமழையில் நனைய வைத்தது.
அடுத்ததாக, தில்லை நடராஜர் சிதம்பரத்தில் ஆடிய ஆனந்த நடனத்தை, சுகுணா வரதராச்சாரியார் ஆனந்தம் ஆரம்பம் என்று நம்மை இசையால் ஆட்டுவித்தார்.
நாதவைபவத்தின் மிகப்பெரிய ஆச்சரியம், ஒரே ராகத்தில், 5700 இசைக்கலைஞர்களும், கர்நாடக சங்கீதத்தை தாளம் தப்பாமல் பாடியது. மற்றொரு ஆச்சரியம்....ஆர்மோனியம், புல்லாங்குழல், கடம், மேளம், ஜிங்கி, வீணை, வயலின் போன்ற இசைக்கருவிகளால், நமது உள்ளத்தை ஆனந்த நடனமாட வைத்தது ஒரு சுகானுபவம்தான்.
அடுத்த புதிய அனுபவம்...
இசை, நாதம், லயம் இவற்றிற்கு எல்லையே இல்லை என்று நிரூபித்தது நாத வைபவம். இந்த இசை மனதை அமைதிப்படுத்தும் வித்தகம். உங்கள் கவலைகளைக் காற்றில் பறக்க விடுங்கள். எண்ணங்களை பறவையாய் சிறகடித்து வானில் பறக்க விடுங்கள். சந்திரகிரகணம் ஏற்படும்போது சந்திரனைப் பருக சகோர பட்சிகள் வருவதுண்டு. அதைப்போல இங்கு நடக்கும் சங்கீதத்தைப் பருக வந்து இருக்கும் சகோரபட்சிகள் நீங்கள் என்று நிகழ்ச்சியை வர்ணனை செய்தது அருமை.
அப்போது நம்மை சகோர பட்சிகளாக்கி பருக செய்தது தத்வமஸ்ய என்ற கர்நாடக சங்கீத பாடல். இதன் ஆலாபனையை ஜி.எஸ்.மணி தொடர, தொடர்ந்து பிரமாண்ட இசைக்குழுவினர் தங்களது கோரசை ரம்மியமாக இசையுடன் கலந்தனர்.
பாடலின் முடிவில், மேளவாத்தியக் கலைஞர்கள் தங்களது விரல்களால் இசையை நடனமாடச் செய்தனர். அத்தனை பாடல்களையும் மென்மையான புன்முறுவலுடன் லயித்து கேட்டுக்கொண்டு இருந்தார், சுவாமி ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.
ஜனவரி 24ம் தேதி இலங்கையில் உள்ள மட்டகிளப்பில் நடைபெற்ற நாதவைபவத்தில் 21 ஆயிரம் இசைக்கலைஞர்களுடன் தேவாரப்பாடல்கள் இசைத்த வீடியோ கிளிப்பிங் காட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து விழாவில் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சுவாமி ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் அருளுரை தொடங்கியது.
இதயம் பாடினால் இறைவன் ஆடுவான். மனிதன் பிறந்தவுடன் பாடிக்கொண்டே தான் பிறக்கிறான். அதன்பிறகு தான் அவன் பாட்ட விட்டு விட்டு படாத பாடு படுகிறான். இசை என்பது சப்த பிரம்மம். சப்த பிரம்மத்தை வழிபட்டால் தான் பரப்பிரம்மத்திற்கு போக முடியும்.
கானம், தியானம், ஞானம் இவை தான் பரப்பரம்மத்தை அடையும் வழிகள்.
இசைக்கு இதயத்தை வசீகரிக்கும் சக்தி எப்போதுமே உண்டு. தண்ணீரில் குதித்தால்தான் நீச்சல் தெரியும். நீச்சல் தெரிந்தபிறகுதான் தண்ணீரில் குதிப்பேன் என்று சொல்வது சரியல்ல.
வாழ்க்கையை, ரசித்து வாழ லயம், தாளம் அவசியம். பொதுசேவை செய்வதும் அவசியம். இன்றைய இளைஞர்கள், சிறுவர்கள் எல்லாம் இவ்வளவு அழகாக கர்நாடக சங்கீதத்தைப் பாடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. தவறோ, சரியோ செய்து பாருங்கள். உங்களுக்கு பொறுமையாக சொல்லித்தருவதற்கு குருநாதர் இருக்கிறார். பறவைகள் எல்லாம் சேர்ந்து பாடுகிறது. நம்மால் ஏன் முடியாது என்று சிந்தித்தபோது தான் இந்த மாபெரும் நாத வைபவத்தை அரங்கேற்ற முடிந்தது. மனசு வைச்சா எல்லாம் முடியும். இசை ஆழ்ந்த ஓய்வைத் தருகிறது. பறவை, விலங்குகள் எல்லாம் தினமும் ஆனந்த நடனம் ஆடுகிறது. நாம் நமது தேவைகளைக் குறைக்கும்போது, நம் செயல்கள் தனித்திறன் அடைகிறது. அப்படித்தான் மகாத்மாகாந்தி வாழ்ந்து இருக்கிறார். நம் நாட்டில் ஊழல் மலிந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத, ஆன்மிகம் நிலைத்த, மனிததன்மை நிறைந்த நாடாக இருக்க வேண்டும். அதை நாம் தான் உருவாக்க வேண்டும். என்ன...நீங்கள் செய்யத் தயாரா என்று கேட்க, அனைவரும் அதை ஒட்டுமொத்த குரலால் ஆமோதித்தனர்.
வன்முறை இல்லாத சமுதாயம், ஆன்மிகம் நானத உபாசனை வளர வேண்டும். காவியம், சாத்திரம், வினோதம், சங்கீதம் இவைகளில் தான் புத்திசாலிகள் தங்கள் நேரத்தை செலவிடுவர். சங்கீத அலை சுனாமியாக மாற வேண்டும். ஊழல் விலகி ஒரு ஆன்மிக நாடாகவும், மனிதத்தன்மை நிறைந்த நாடாகவும் மாற வேண்டும். பொதுசேவை, யோகா செய்ய சங்கல்பம் எடுக்க வேண்டும்.
சங்கீதத்தால் உணர்வும், புத்தியால் ஞானமும், தியானத்தால் இதயமும், யோகாவால் வாழ்க்கையும் மேம்படுகிறது. வாழ்க்கை சந்தோஷமாகி ஆனந்தம் அடைகிறது.
கவலைகளை இங்கே விட்டுச் செல்லுங்கள். வீட்டுக்குச் செல்லும்போது சந்தோஷமாக செல்லுங்கள். அதற்கு ஒரு சக்தி உள்ளது. அதுதான் பரம்பொருள். நமக்குள், இப்பொழுது இந்த கணத்தில் அது இருக்கிறது.
ஆன்மிகம், யோகா, இயற்கை உணவு தான் நமக்குத் தேவை. இப்பொழுது 5 நிமிடம் தியானம் செய்வோம். தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவது மட்டும் இல்லை. அது ஆழ்ந்த ஓய்விற்கு எடுத்துச் செல்வது. எல்லோரும் அவரவர் இருக்கையில் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டு, முகத்தில் புன்னகை தவழ, உடலை ஓய்வாக இருக்கச் செய்யுங்கள். உடலில் கவனம் செலுத்துங்கள். இறைவன் அளித்திருக்கும் அற்புதமான பொக்கிஷம் இந்த உடல். ஆழமாக மூச்சு எடுத்துக் கொண்டு, புன்சிரிப்புடன் மெதுவாக வெளிவிடுங்கள். இப்பொழுது, தலைஉச்சியில் கவனம் வையுங்கள். தலைக்குமேல் உள்ள ஆகாயத்திற்கு மனதைக் கொண்டு செல்லுங்கள். அடுத்து ஒரு ஆழமான மூச்சை உள்ளிழுத்து நிதானமாக வெளிவிடுங்கள். தண்ணீரில் மீன் உள்ளது போல் காற்றில் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு ஆழமான மூச்சு எடுத்து நிதானமாக வெளிவிடுங்கள். நல்ல எண்ணத்தை நினைத்துக் கொள்ளுங்கள். கெட்ட எண்ணம் வந்தாலும் வரட்டும். தடுக்காமல் உடலுக்கு ஓய்வு கொடுங்கள். ஓம் என்ற ஒலியை அனைவரும் ஒன்றாக எழுப்புங்கள். அன்புடனும், அமைதியுடனும் சேர்ந்து இந்த ஒலியை எழுப்புங்கள். இப்போது தீர்க்கமாக சுவாசம் எடுங்கள். ஆதியும், அந்தமும் அடங்கியுள்ளதுதான் ஓம். அடுத்து ஒரு ஆழமான சுவாசம். உடலும், உள்ளமும் பரிசுத்தமாக உள்ளது என்று எண்ணுங்கள்.
இப்போது எல்லா முயற்சிகளையும் விட்டுவிட்டு, நன்றாக ஓய்வு எடுங்கள். உடல் ஓய்வாக இருக்கட்டும். மனது விசாலமாக விரிவடையட்டும். அடுத்து ஒரு ஆழமான சுவாசம். ஓம் சாந்தி. இப்போது நீங்கள் அமைதியாகவும், ஓய்வாகவும் இருக்கிறீர்கள். அடுத்து ஒரு ஆழமான சுவாசம்... மெதுவாக மூச்சை வெளிவிடுங்கள். புன்னகையுடன் மூச்சை உள்ளிழுங்கள். மெதுவாக விடுங்கள்.
சூழ்நிலையை நினைத்துக் கொண்டு மெதுவாக கண்களைத் திறங்கள். நாம் சந்தோஷமாக இருக்க 5 நிமிடம் தியானம் செய்வோம் என்று ஆரம்பித்தோம். ஆனால், இப்போது 13 நிமிடங்கள் செய்திருக்கிறோம். நமது எல்லா செயல்களுக்கும் நாம் தான் காரணம். தியானம் செய்தால் நமது செயல்கள் சரியாக அமைகின்றன. அதனால், அதற்கு கவனம் செலுத்த வேண்டும்.
எல்லோரும் பொது சேவையில் ஈடுபாடு வைத்திடுங்கள். டாக்டராக இருந்தால், ஆண்டுதோறும் 3 இலவச சிகிச்சை மையத்தை செயல்படுத்துங்கள். ஆசிரியராக இருந்தால் 3 ஏழைக்குழந்தைகளுக்கு இலவசமாக டியூசன் எடுங்கள்.
அடுத்து தமிழ்நாட்டு நாத வைபவத்தை பருகுவோம்.
சத்சங்கத்தில் இருந்து நித்சங்கமும், நித்சங்கத்தில் இருந்து நிர்விகல்பியும், நிர்விகல்பியில் இருந்து ஜீவன் முக்தியும் கிடைக்கிறது என்கிறார், ஆதிசங்கரர்.
அதைத் தொடர்ந்து கிருஷ்ணன் வந்தே என்ற தமிழ் இசைப்பாடலை காயத்ரியும், சித்ராவும் பாடினர். ஸ்ரீரஞ்சனி தேவிபவானி பாடலை சித்ரா பாடி பார்வையாளர்களை ஆட்டம் போட வைத்தார். இது நாத உபாசனை மட்டுமல்ல. நாத யக்ஞை என்று நிரூபித்தது நாத வைபவம். வழிநடத்திய குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜிக்கு கோடி நமஸ்காரங்கள்.
===

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இசையால் உண்டாகும் இறையின்பம்”
Post a Comment