Monday, February 7, 2011
தகிட ததுமி...தகிட ததுமி...
Do you like this story?
நடனம்...
உறங்கி வழிபவரைக் கூட, உற்சாகத்துடன் உசுப்பி எழச்செய்யும் வார்த்தைதான் இது.
நடனம் என்பது பொழுதுபோக்கிற்காகவும், கண்களுக்கு களிப்பூட்டும் விதமாகவும் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதுமட்டும் தானா...உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் அமைகிறது.
முகப்பொலிவையும், மனமகிழ்ச்சியையும் தருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நடனத்தை அனைவருக்குமே ஆட ஆசைதான். ஆனால், எப்படி ஆடுவது என்று தான் தெரியவில்லை.
நீங்கள் ஆடுவது தான் நடனம். சும்மா தையத் தக்கா...தையத் தக்கா என்று காலை தூக்கி, கையை நீட்டி உங்களுக்கு பிடித்த விதத்தில் ஆடுங்கள். ஒரு கட்டத்தில் உங்களுக்கே அது சலித்துப் போய், முறைப்படி நடனம் ஆடக் கற்றுக் கொள்வீர்கள். நடனத்திற்கு அழகு மென்மைதான்.
பரதம்
பரதநாட்டியத்தில் இந்த மென்மை அளவுக்கு அதிகமாகவே இருக்கும். நமது நாட்டின் பாரம்பரிய நடனம் இதுதான். இந்த அற்புத நடனத்தைத்தான் அன்று சிவன் கைலாயத்திலும், நடராஜர் சிதம்பரத்திலும் ஆடிக்களித்தனர்.
இந்தியா முழுவதும் பரவியுள்ள நடனம் பரதம். பரதநாட்டியம் என்பதன் சுருக்கம் தான் இது. பரதம் ஆடுவதற்கும், ஆடுவதைப் பார்த்து ரசிப்பதற்கும் எல்லோருக்கும் பிடிக்கும்.
பிற நடனங்கள்
பரதம் தவிர, கேரளாவில் கதகளி, ஆந்திராவில் குச்சிபுடி, ஒரிசாவில் ஒடிசி, உத்திரப்பிரதேசத்தில் கதக் என அந்தந்த பகுதிகளிலும் ஒவ்வொரு விதமான நடனக்கலைகள் புகழ்பெற்று விளங்குகின்றன.
அவை அனைத்தும் ஓரளவு பரதம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. அவற்றிற்கான பலன்களும் அதற்கேற்பவே அமைகின்றன. மேற்கத்திய நடனங்கள் சமீபகாலமாக இந்தியாவில் விரும்பி ஆடப்படுகின்றன. பிரேக், வெஸ்டர்ன் டான்ஸ் என்று உடலை நிறுத்தி, வளைத்து ஆடுவது இளைஞர்களை பெரிதும் கவர்கின்றன.
பெல்லி
மத்திய கிழக்கு நாடுகளில் ஆடப்படும் ஒருவகை பாரம்பரிய நடனம் பெல்லி. மேற்கத்திய நாடுகளிலும் பரவலாக ஆடப்படுகிறது.
பால்ரூம்
பால்ரூம் நடனம் என்பது ஜோடியாக ஆடும் நடனம். விழாக்காலங்களில் மேடைகள், தொலைக்காட்சிகளில் ஆடப்படுகிறது. மேற்கத்திய நாகரீகத்தில் பிறந்து உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானவர்களால் ஆடப்படும் நடனம் தான் பால்ரூம்.
சல்சா
இதுவும் ஒருவகை மேற்கத்திய நடனம்தான். கியூபா நாடு சல்சா நடனத்தின் பிறப்பிடம். இருவர் இணைந்து ஆடும் நடன வகையைச் சேர்ந்தது. அமெரிக்கா, ஜப்பான், போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகளில் இது பிரபலம். இந்த நடனம் ஆடினால், இதயத்துடிப்பு ஒரே சீராக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அப்படினா....இனிமே ஒரே சல்சாதான் என்கிறீங்களா?
===

Subscribe to:
Post Comments (Atom)
1 Responses to “தகிட ததுமி...தகிட ததுமி...”
February 8, 2011 at 6:39 AM
பல வகை நடனங்கள் கணிணியின் விசைப் பலகையில்
விரல்கள் நர்த்தனமாட, கண்களும் கவிபாடுதே!
Post a Comment