Tuesday, December 4, 2018

திரும்புவோம் பழமைக்கே


தூய உள்ளம்
தூய இல்லம்
மண்வாசனை தரும் மழைநீர்
நெகிழி இல்லாமல்
நெகிழச் செய்யும் உறவுகள்


கண்குளிர வைக்கும் செழுமை
மனமகிழ வைக்கும் பழமை

நாவிற்கு ரசனை
உடலுக்கோர் அமுதம்

நிழல் தரும் மரங்கள்
உயிரூட்டும் உறவுகள்
பசி வந்தால் பத்தும்
பறக்கும்

நயமாக நலம் விசாரிக்கும்
பெரியவர்கள்
ஊர் கூடி தேரிழுப்பர்
மலைபோல் வரும்
பிரச்சினைகளும்
பஞ்சாய் பறக்கும் நண்பர்களால்...

நலம் தரும் விளையாட்டுகள்
களத்தில் ஆட வைக்கும் விவசாய வேலைகள்

மாதம் மும்மாரி பெய்த மழையும்
வற்றாத வறுமையிலும்
செழிப்பான கல்வியும்
காலம் மாறினாலும்
மீண்டும் வாரா...

சிக்கலான பிரச்சினைகளையும்
சுமூகமாக
தீர்த்து வைக்கும்
பஞ்சாயத்துகள்...

குடும்பத்திற்கு
பாடம் நடத்தும்
கூட்டுக் குடும்பங்கள்...

ஓவியம்...சிற்பம்... இசை...நாட்டியம் என கலையை கலையாக
கற்பிக்கும் வித்வான் கள்...!

ஆன்மீகத்தையும்...தேசீயத்தையும்...மொழியையும்... எளிமையான முறையில் வாழ்ந்து
சொல்லிக் கொடுத்த
பெரியோர்கள்...

பொதுநலனே தன்னலம் என வாழ்ந்து மக்களின்
உள்ளத்தில் மறையாத தலைவர்கள்...

காதல்...நட்பு... வீரம்... கொடை என இலக்கணம் கற்பித்தவர்கள்
நம் முன்னோரே...!


பகுத்தறிவை நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல்
சொல்வதிலும் சரி...அர்த்தம் உள்ள
சாத்திர சம்பிரதாயங்களைக்
கடைபிடிப்பதிலும் சரி...நம் முன்னோர்தான் என்றால்...
ஐயமில்லை!💐

இப்படி...
அசைபோட மட்டும்
திரும்ப வேண்டா...

பாரம்பரியம் கட்டிக் காக்கவும்...நீடித்த
உறவுகளை நிலைநாட்டவும்
மீண்டும் திரும்புவோம்
பழமைக்கே...!

இது புதிய சகாப்தம்
படைக்கவே....!

_பாரதி சங்கர்

0 Responses to “திரும்புவோம் பழமைக்கே”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby