Thursday, March 8, 2018

பெண்ணீயம் பேசுபவரா நீங்கள்?

மார்ச் 8

உலக மகளிர் தினம்

சிறப்பு கட்டுரை


பெண்ணீயம் பேசுபவரா நீங்கள்?





- பாரதிசங்கர்


பெண்ணீயம் பேசுபவரா நீங்கள்? அப்படி என்றால் கண்டிப்பாக இந்த கட்டுரை யை நீங்கள் படிக்க வேண்டும்.


பெண்கள் வீட்டின் கண்கள் என்பார்கள். பெண் என்றால் பேயும் இரங்குமாம். அத்தகைய அற்புதமான குணம் படைத்தவள். ஆண்களை விட மனோசக்தி வாய்ந்த வள் என்பதாலேயே அவளை சக்தி என்ற பெயரில் கடவுளாக வழிபடுகின்றனர்.

பிறருக்கு உதவுவதில் தயாள குணம் கொண்ட நதி போன்ற வள் என்பதால் தான் நாம் நாட்டில் உள்ள நதிகளை கங்கை... காவிரி... கோதாவரி... சரஸ்வதி...நர்மதை... தாமிரவருணி என பெண்பால் பெயர் சூட்டி அன்புடன் அழைக்கிறோம்.
 




இப்படி இன்னும் எவ்வளவோ தனிச்சிறப்புகளைக் கொண்டிருந்த போதும் ஆண்டாண்டு காலமாக பெண்ணானவள் அடிமைத்தளையில் கட்டுண்டே கிடக்கிறாள். காரணம் கல்வி அறிவூட்டாததுதான். எதற்காக இந்த கோபம் ஆண்சமுதாயம் கொண்ட து எனில் விடைகாண நாம் சங்க காலம் வரை செல்ல வேண்டும்.


சங்க காலத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்பாற்புலவர்கள் இருந்து வந்தனர். உதாரணமாக ஔவையார்...காக்கை பாடினியார்...நச்சினார்க்கினியர் ஆகியோரை சொல்லலாம். இது அப்போதைய புலவர்கள் மத்தியில் அவர்களால் தனக்கு ஏதாவது பணமுடிப்பு...பரிசு... புகழ் என கிடைக்க வேண்டியதும் கிடைக்காமல் போய்விடுமோ என பயம்...பொறாமை கலந்த எரிச்சலை ஊட்டியது. இது பிற்கால இலக்கிய த்தில் வெளிப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமை எதுவும் கொடுக்க ப்படவில்லை என்ற அவலத்தை உண்டாக்கியது.



எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காண் என்று கும்மியடி



என்ற மகாகவி பாரதி கொண்ட சூளுரையை இன்று நம் மகளிர் வாழ்ந்து காட்டுகின்றன ர்.


பெண்கள் எந்த துறையிலும் தங்களாலும் ஜொலிக்க முடியும் என நிரூபித்து வருகின்றனர்.

மருத்துவ த்தில் அன்னிபெசண்ட் அம்மையார்... கவிக்குயில் சரோஜினி நாயுடு... விளையாட்டில் மேரிகோம்...சிந்து...வீரத்தில் ஜான்சி ராணி லட்சுமி பாய்...வேலுநாச்சியார்... தில்லை யாடி வள்ளியம்மை... விண்வெளி அறிவியலில் கல்பனா சாவ்லா...நடிப்பில் ஆயிரம் திரைகண்ட ஆச்சி மனோரமா...கல்வி யில் ஆண்டு தோறும் முதலிடம் பிடிக்கும் மாணவிகள்... பொருளாதார வளர்ச்சிக்கு சாந்தா கோச்சர் (ஐசிஐசிஐ வங்கி)...அரசியலில் இந்திராகாந்தி... ஜெயலலிதா... சமூகநலனில் அன்னை தெரசா ....என எத்தனை யோ நபர்களை இன்னும் சொல்லி க் கொண்டே போகலாம்.


தற்போது இன்னும் ஒருபடி மேல் போய் செவ்வாய் கிரகத்திற்கே பயணம் செய்ய கோவை மாணவி சாரதா பிரசாத்தைத் தேர்ந்தெடுத்து ள்ளது நெதர்லாந்து மார்ஸ் ஒன் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். இவர் 2024ல் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய தன்னை ஆயத்தம் செய்து வருகிறார்.



அப்பேர்ப்பட்ட பெண்களுக்கு ஒரு காலத்தில்...

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என கல்வி கற்க முட்டுக்கட்டை போட்டு அநீதி இழைத்தது சமுதாயம்.


அவர்களைப் போகப்பொருளாகவே பார்த்தது. 


மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்..

என்று அறைகூவல் விடுத்தார் நம் முண்டாசுகவி.


அதேநேரம் அவர்..


வீட்டுக்கு ள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்


என உரைத்தார்.


அவரது சத்திய வார்த்தை கள் பின்னாளில் சத்தியமானது.


தந்தை பெரியாரும் ஆண்களுக்கு நிகராக சொத்து ரிமையை பெண்களுக்கும் தர வேண்டும். அப்படி கொடுக்காமல் இருப்பதால் தான் அவர்கள் காலங்காலமாக அடிமையாக வே இருக்கிறார் கள் என்றார்.


ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் கிராமத்தில் தான் உள்ளது என்றார் அண்ணல் காந்தி. கிராமத்தின் முன்னேற்றம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. வீட்டின் முன்னேற்றம் பெண்ணிடம் இருந்தே ஆரம்பிக்கிறது.


ஒரு வீட்டில் பெண்தான் குத்து விளக்காக ஜொலிக்கிறாள். அவளையே எங்கள் குலமகளின் குத்து விளக்கு... மகாலட்சுமி.. அன்னபூரணி என சமுதாயம் இருகரம் கூப்பி வரவேற்கிறது.


பெண் உடலளவில் ஆண்களைவிட பலம் குறைந்த வளாக இருந்தாலும் மனதளவில் பலசாலி தான்.


அவர்கள் வீட்டில் கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டால் அந்த வீட்டின் கதி அதோகதிதான்.


கணவனை இழந்து ம் பெற்றோரை இழந்தும் தன்னந்தனியாக நின்று பிள்ளைகளை வளர்த்து சாதித்து காட்டும் வீரப் பெண்களும் இன்று நம்முடன்தான் வாழ்ந்து வருகின்றனர்.


ஒவ்வொரு ஆணின் வெற்றி க்குப் பின்னால் நிற்பவள் பெண்தான். இன்னும் அவளை நாம் நன்றாக புரிந்து கொண்டால் அவளை நாம் எள்ளளவும் துன்புறுத்த மாட்டோம். பத்து மாதம் சுமந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது மறுஜென்மமே எடுக்கிறாள். ஆண்களால் அந்த வலியை தாங்க முடியாது என்பதாலேயே பெண் மனமுவந்து பிரசவிக்கிறாள்.



தெருவில் போகும் பிச்சைக்காரன் கூட ஒரு வீட்டு வாசலில் சென்று அம்மா... தாயே...என்று அழைத்து தான் பிச்சை கேட்கிறான். அப்போது தான் ஏதாவது கிடைக்கும் என அவனுக்கே தெரிகிறது.


ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே என்பர். அதற்கேற்ப ஆக்கும்... அழிக்கும் சக்தியை கொண்டவள் பெண்.


அவள் நினைத்தால் எப்பேர்ப்பட்ட முரடன்..திருடன்...அயோக்கியனையும் அன்பால் பிணைத்து தன் வசப்படுத்தி திருத்தி விடுவாள்.


அதேபோல் அவளது பார்வைக்கு இது ஒன்றுக்கு ம் உதவாத ஜென்மம் என்று தெரிந்தால் அழிக்க வும் தயங்க மாட்டாள்.



முன்பெல்லாம் பொது இடங்களில்... அலுவலகங்களில் பாலியல் தொல்லை க்கு ஆளாகும் பெண்கள் வெளியே சொல்ல பயந்து நொந்து போய் தங்கள் வாழ்க்கை யையே தொலைத்தனர். இப்போது துணிச்சலாக அந்த இடத்திலேயே செருப்படி கொடுத்து தட்டிக் கேட்கின்றனர்.



பெண்கல்வியைப் பொருத்தமட்டில் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் கல்வி கற்றால் அவள் ஒரு சந்ததியினரையே கல்வி கற்க செய்து உருவாக்கி விடுகிறாள்.


குழந்தை களின் அறிவு வளர்ச்சி க்கும்...நாகரிகத்திற்கு ம் அஸ்திவாரம் பெண்தான்.


அதனால் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய தலையாய கடமை பெண்கல்வியை ஊக்குவிப்பது ஒன்றே.


புரட்சி கவிஞர் பாரதிதாசனும்...


கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்

அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்! நல்ல

புதல்வர் கள் விளைதல் இல்லை!

என்றார்.



மங்கையராக பிறப்பதற்கே நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா...


என்றார்... கவிமணி தேசிக விநாயகம்.


அதனால் பெண்குழந்தை யைப் பெற்றால் நமக்கு கடனே என கவலை கொள்ளாதீர். நம் இறுதி மூச்சு ள்ளவரை நம்மை காப்பவள் எங்கே இருந்தாலும் சரி... அது நம் மகளாகவே இருக்கும். அதனால் தான் பெண்களுக்கு தாயைவிட தந்தை யிடம் பாசம் மேலோங்கி நிற்கும்.



மறைந்த தமிழக முதல்வரும்...பெண்களுக்கு ஆக்க சக்தி யாக திகழ்ந்தவருமான ஜெயலலிதா வும் இந்த உண்மை யை உணர்ந்ததால் தான்... தொட்டில் குழந்தை திட்டம்....மகளிர் காவல்துறை... சுய உதவி குழுவினர்... அம்மா இருசக்கர வாகன திட்டம்... தாலிக்கு தங்கம் என பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றினார்.


இன்று நம்மில் பெண்ணீயம் பேசும் பலரும் அதைக் கடைபிடிப்பதில்லை. பேசுவதோடு சரி. அதை அப்படியே மறந்து விடுகிறார்கள்.



ஆதலால் நாம் செய்வது யாதெனில் பெண்ணடிமை அகற்றுவோம்.  பெண்ணை கண்ணெனக் காப்போம்.


0 Responses to “ பெண்ணீயம் பேசுபவரா நீங்கள்?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby