Monday, January 13, 2014
பொங்கல் சிறப்பு கவிதை
Do you like this story?
மெல்லிய பூங்காற்று
மணம்கமழும் மண்வாசனை
சாணத்தால் மெழுகிய தரை
அதில் அழகான பூக்கோலம்!
இருட்டைக் கிழிக்கும் கதிரவன்
பனியை விலக்கும் பாங்கு
கண்ணில் படும் நேரம்
ஆனந்தம் நெஞ்சைத் தொடுமே!
இயற்கை அன்னையின் கொடையை
அவளுக்கே அர்ப்பணித்து
இளஞ்சூரியன் முன்னிலையில்
பொங்கல் பானையில் பொங்குதே!
பால்; பொங்கும் அவ்வேளை
பால்மனமும் பொங்குமே
மங்கலமான இந்நன்னாளில்
மகிழ்ச்சியும் வந்து சேரட்டுமே!
அறுவடைக்கு தகுதியோ
நெற்கதிர்கள்; தலைகுனிதல்
தமிழருக்கு தகுதியோ
தலைநிமிர்ந்து தான் நடத்தல்!
இயல்பதனை மறந்ததால்தான்
மனமுதிர்ச்சி நம்மில் இல்லை
இயல்புதானே இயற்கை பாடம்
நமக்கு தருமே வாழ்க்கைப் பாடம்!
பகலிரவு பாடுபட்டும்
பயனெதுவும் தெரிவதில்லை
பாட்டு பாடி நாத்து நடுவர்
பொழுதெல்லாம் பூரிப்புடன்!
ஏழையென்றும், பணக்காரென்றும்
பேதம் செய்யத் தேவையில்லை
மாற்றம் வந்தால் போதுமே
மனம் மகிழும் வண்ணமாய்..!
சாத்தியங்கள் யாவுமே
சங்கடங்கள் தான் தீர்க்கும்
சிணுங்குவதால் லாபமா
யாருக்கதும் நட்டமா?
புரட்சி செய்ய எண்ணுவர்
புருவம் உயர்த்தி பேசுவர்
தினமும் செய்யும் வேலையோ
தினமும் அவருக்கு பாரமாம்!
வெற்றி சொல்லும் நம்மிடம்
கேள்வி கேட்கும் மனதிடம்
மறக்கும் கடந்த பாதையில்
கவனம் வைத்தால் போதுமே!
இப்போது
தமிழனென்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா!
வேகம் உன்னில் வருமடா!
விவேகம் உனக்கு நண்பன்டா!
பொங்கட்டும் புதுமைகள்
தங்கட்டும் செழுமைகள்
திளைக்கட்டும் மகிழ்ச்சியாய்
திக்கெட்டும் பரவசம்!
இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
-பாரதிசங்கர்
முக்காணி.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “பொங்கல் சிறப்பு கவிதை ”
Post a Comment