Tuesday, December 31, 2013

புதுப்பொலிவைத் தரும் புத்தாண்டு

இதுமட்டும் போதுமே
நாங்கள் என்றும் புதுப்பொலிவுடன் திகழ..!

இதுதானே என்று தள்ளிப் போடும்
நற்காரியங்கள்...!

நற்காரியங்களையும், நற்செயல்களையும்
சிந்திக்க நேரமில்லை என்று
அசட்டையாக சொல்லும் பதில்கள்...!

தன் உடம்பைக் கூட கவனிக்க
நேரமில்லாதது போல் நடிக்கும்
அசகாய நடிப்புத் திறன்...!

அடுத்தவர் எப்போதும் நமக்கு மட்டும்
நல்லவராக இருக்க வேண்டும் என்று
நினைக்கும் முட்டாள் தனம் !

தான் சொல்வதே நிதர்சனமான உண்மை
என சத்தியம் அடிக்காத குறையாக
வாதிடும் அசட்டுத் தைரியம்..!

தான் பேசுவது சரியா தவறா
என ஆராயாமல் அடிக்கடி
செய்யும் அலட்சிய தவறுகள்!

சக மனிதரை மனிதராய் பாராமல்
புழுவைப் போல் பார்க்கும்
மூடக்குண நலன்கள்!

பிறர் நமக்கு அடிமை என்று
நினைக்கும் அடி முட்டாள்தனம்!

எல்லா பொருட்களையும்
அடைய வேண்டும் என்று எண்ணும்
ஏகாந்த எண்ணம்..!

இனி சத்தியமாக இந்த
தவறை செய்யவே கூடாதுப்பா...
என்று பச்சைக்குழந்தையாய்
செய்யும் சத்தியங்கள்...!

படித்தால் மட்டும் போதுமா
பண்பு வேண்டாமா என்று
தான் செய்யும் தவறை உணராது
அடுத்தவர்மீது பழி போடும்
பாழான குணநலன்கள்!

இவை மட்டும்
இப்படி இருந்தால் போதும்!

புத்தாண்டைக் கொண்டாடும் முன்
போட்டிருக்கும் சபதங்கள்
போகப் போக கரைந்து கானல் நீராகாமல் ...!


அனைவருக்கும்
இனிய புத்தாண்டு - 2014 நல்வாழ்த்துக்கள்
- பாரதி சங்கர்,
முக்காணி.

2 Responses to “புதுப்பொலிவைத் தரும் புத்தாண்டு ”

திண்டுக்கல் தனபாலன் said...
December 31, 2013 at 6:07 AM

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


பாரதிசங்கர் said...
December 31, 2013 at 11:52 AM

Thanks. Same to u.


Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby