Saturday, December 25, 2010

மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்.

நேற்று, டிசம்பர் 24 எம்.ஜி.ஆர். நினைவுதினம். அவர் பாடலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையை நெறிபடுத்துபவை.

 உதாரணத்திற்கு ஒரு பாடல்:

"இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல
யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்.
ஒரு மாசு குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? "என்ற பாடலின் வரிகள் எம்.ஜி.ஆருக்கு நூற்றுக்கு நூறு பொருந்துவது உண்மைதான்.

சமீபத்தில் சென்னை சூளையில் உள்ள நடராஜ் திரையரங்கிற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடித்த கண்ணன் என் காதலன் திரைப்படம் பார்க்க சென்றிருந்தேன். சிரித்தாள் தங்க பதுமை, கண்கள் இரண்டும், பாடுவோர்...பாடினால்...போன்ற காலத்தால் அழியாத மறக்க முடியாத பாடல்கள் அந்த படத்தில் உள்ளன.

அந்த பாடல்கள் திரையில் வரும்போதெல்லாம் மக்கள் படும் பரவசத்திற்கு எல்லையே இல்லை எனலாம். அவர்களின் சந்தோஷம், ஆட்டம், பாட்டம் இது மட்டுமல்லாமல், இன்னும் ஒரு படி மேலேபோய், சூடம் ஏற்றி தீபாராதனை காட்டி, மெழுகுவர்த்திகளை வரிசையாக ஏற்றி வைத்து அவரை ஒரு தெய்வமாகவே வழிபடுகின்றனர்.

எந்த ஒரு மனிதனையும் முன்னேற்றுவது அவனது தனித்திறமை மட்டுமே. அதற்கு அடையாளமாக நமது புரட்சித்தலைவரை கூறலாம். அவர் ஏழை, எளிய மக்களிடம் காட்டும் பாசம், அன்பு, கருணை ஆகிவற்றிற்கு அளவே இல்லை.

அவர் நடித்த எந்த ஒரு படத்திலும் இதுவரையிலும் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளோ இடம்பெறுவதில்லை. மேலும், மனித வாழ்க்கைக்கு தேவையான பாசிட்டிவ்வான கருத்துக்கள் அவரது படங்களில் நிறைய இடம்பெறுவதைக் காணலாம். அவை இன்றும் என்னைப் போன்ற இளைஞர்களின் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டுகின்றன.

இன்றும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும். நடராஜ், மகாலெட்சுமி, சரவணா போன்ற திரையரங்குகள் எம்.ஜி.ஆரின் படங்களை போட்டி போட்டுக் கொண்டு திரையிடுவதைக் காணலாம். அந்த பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு வாரம் ஒரு திருவிழாதான்.

 என்ன நீங்களும் இந்தவாரம் எம்.ஜி.ஆர். படம் பார்க்க கிளம்பி விட்டீர்களா?

0 Responses to “மக்கள் மனதில் வாழும் எம்.ஜி.ஆர்.”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby