Saturday, December 25, 2010

சுனாமியே...கீதம் பாடு

2004 டிசம்பர், 26.ஆறாத நாள் இது. ஆம். அதனால் தான் இது ஆறாம் ஆண்டு சுனாமி நினைவு தினமோ..-?
இனியும் ஆறாதிருக்கும் இந்த கோரப்பசியைத் தணிக்க இந்த கவிதையை படியுங்கள்...

                                                  சுனாமியே...கீதம் பாடு


காலைப்பொழுதின் இனிமையில்
கடலில் அமைதி தவழ்ந்தது.
கோப அலைகள் கொப்பளிக்க
சுனாமி சேர்ந்து வந்தது!

இதயம் எல்லாம் படபடக்க
இமயம் வரை துடிதுடிக்க
பொங்கும் அலைகள் யாவுமே
சூறையாடிச் சென்றதே!




அய்யோ, அம்மா கூக்குரல்
இன்னும் காதில் ஒலிக்குதே!
கடலின் பசிக்கு காரணம்
யாரறிவார் நம்மிலே!

கடலின் ஆழம் தெரியாது
மனதின் ஆழம் தெரியாது!
மண்ணில் வாழும் யாருக்கும்
இறக்கும் நேரம் தெரியாது!

விதியின் சோகம் விடியுமா?
உனக்கும் விதிக்க தெரியுமா?
உன்னைப் போல்தான் யாவரும்
கண்ணைப் போல காப்பாயே!

இன்னும் இந்த பூமியை
சொர்க்க பூமி ஆக்கவே
எம்மை போல யாரையும்
அன்பில் சேர்த்து அணைக்க வா!

கடலை நம்பி வாழ்கிறோம்
கரையில் ஒதுங்கும் கிளிஞ்சலாய்..!
சோகம் மெல்ல ஆறவே
கீதம் எங்கும் பாட வா!
                                   
                            - பாரதிசங்கர், முக்காணி
===

0 Responses to “சுனாமியே...கீதம் பாடு”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby