Monday, December 27, 2010
எப்படி இருக்க வேண்டும் புத்தாண்டு?
Do you like this story?
புத்தாண்டு பிறந்து விட்டால்போதும். அதிகாலையிலேயே குளித்துவிட்டு, புத்தாடை உடுத்தி, கோவிலுக்குச் சென்று விடுவோம். அங்கு சென்று கடவுளிடம் என்ன வணங்குவது என்று யாருக்கும் சொல்லித் தர வேண்டிய தேவை இல்லை. ஏன் என்றால், அவரவருக்கு என்ன தேவையோ அதைத்தான்
கடவுளிடம் கேட்கப்போகிறார்கள். இந்த இடத்தில் தான் ஒரு விஷயத்தை நம்மவர்கள் மறந்து விடுகிறார்கள். பரீட்சையில் நிறைய மார்க் வாங்க வேண்டும்.
எனக்கு நல்ல வேலை கொடு. கைநிறைய சம்பளம் கொடு. எம்பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளையை அமைத்துக் கொடு. தொழிலில் நல்ல லாபத்தைக் கொடு. நீண்ட நாளாக எனக்கு இருக்கும் நோயை எப்படியாவது போக்கி விடு...கடவுளே...என்று இதுபோல் தான் எல்லோரும் முறையிடுகிறார்கள். அப்போதைக்கு எது தேவையோ அது கிடைத்தால் போதும் என்று தான் நினைக்கிறோம். இல்லையா? அப்படியானால், எதைக்கேட்பது என்று தானே கேட்கிறீர்கள்.
எதைக் கேட்டால், எல்லாம் கிடைக்குமோ அதைக் கேட்கலாமே...!
வாழ்க்கையில் தான் நமக்கு எல்லாமே தேவையாக இருக்கிறதே... நாம் எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ, அது வந்து விடுகிறது. எது வேண்டும் என்று நினைக்கிறோமோ, அது வராமல் இழுத்தடிக்கிறது. அப்படியானால், தவறு எங்கு நடக்கிறது? நம்மிடம் தான் என்பதை நாம் ஒருக்காலும் ஒப்புக் கொள்வதில்லை. பழியை சுமத்தியே பழக்கப்பட்ட மனதிற்கு தவறை ஒத்துக்கொள்ள தைரியம் வருவதில்லை.
அந்த தைரியத்தைக் கொடு என்று கேட்கலாம். அப்புறம் பயம் எதற்கு? என்கிறீர்களா? உங்கள் லட்சியப்பாதையில் நேர்மையுடன் நடக்கும்போது தவறு நிகழ்ந்து விடக்கூடாது என்று பயப்படலாமே... பயந்து பக்தியுடன் கடவுளை வேண்டுவதால் தானே பயபக்தி என்ற வார்த்தையே உருவாகி உள்ளது.
விண்ணைத் தொடும் அளவிற்கு வளர்ச்சி வேண்டும். வேகத்துடன் விவேகம் வேண்டும். பயம் வேண்டும். வீரமும் வேண்டும். நிமிர்ந்த நன்னடை வேண்டும். நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நேர்மை வேண்டும். எண்ணிய காரியங்கள் திண்ணமாக நடைபெற வேண்டும். ஈவு&இரக்கம், அன்பு&கருணை, இன்பம்&துன்பம், பாசம்&நேசம், ஊடல்&கூடல், ஏளிமை&ஆடம்பரம் இப்படி ஏற்ற இறக்கங்களுடன் கூடியதுதான் வாழ்க்கை.
அதை நாம் புரிந்து கொண்டால், ரசித்து வாழலாம். ஒவ்வொரு நொடிப்பொழுதையும் தனக்கு கிடைத்த அரிய வரப்பிரசாதமாய் எண்ணி வாழுங்கள். சிந்தனையை புதிய திசையில், உற்சாகமாய் சிறகடித்து பறக்க விடுங்கள். நீங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவோ உள்ளது. உங்களால், வீட்டுக்கும், சமுதாயத்திற்கும், நாட்டுக்கும், உலகுக்கும் எவ்வளவோ அரிய பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது.
முயற்சிகளும், வலிகளும் இன்றி வரும் வெற்றி எதுவும் நிலைக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள். வியர்வை சிந்தி உழைப்பது உடல் சார்ந்த உழைப்பு. மூளையின் சக்தியை சிந்தி உழைப்பது அறிவு சார்ந்த உழைப்பு. உங்களுக்கு எதில் விருப்பம் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
எவருக்கும் அடிபணியாதீர்கள். நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. உண்மை உங்கள் பக்கம் உள்ளவரை.
சாதனைகள் உங்களைதூரத்தில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதை அருகில் அழைத்து அதனுடன் வெற்றி நடைபோடுங்கள். வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் வைர வரிகளை உற்று நோக்குங்கள்...
எழுமின்...விழுமின்...நடமின்...! குறிசெல்லும் வரை நில்லாது செல்மின்...!
நீங்கள் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் வரை அதற்காக இடைவிடாது போராடுங்கள். நீங்கள் எண்ணிய காரியங்களில் வெற்றி இந்த வருடத்திற்குள் சாத்தியமாக எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
& பாரதிசங்கர், முக்காணி.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “எப்படி இருக்க வேண்டும் புத்தாண்டு?”
Post a Comment