Saturday, May 28, 2011

நமக்கு எதுக்குப்பா வம்பு?

இந்த உரையாடலைத் தான் இன்றைய சமூகத்தில் பல பேர் சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெருகுவது சமூக அவலங்கள்தான். அதனால் சுற்றி சுற்றி பாதிக்கப்படுவது நாம் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

என்ன சொன்னாலும் புரியவே மாட்டேங்குது
என்ன சொன்னாலும் உனக்குப் புரியவே மாட்டேங்குது. எத்தனை தடவைதான் நான் சொல்றது? நீயே சொல்லு என்ற எரிச்சல் அன்பானவர்கள் மீதுதான் நமக்கு வரும். அதனால் அவர்கள் மீது எரிச்சல் அதிகமாக வந்தாலும் கூட நாம் தவறான விதத்தில் பேசிவிடக்கூடாது. அவர்கள் ஏதோ அறியாமல்தான் செய்கிறார்கள் என்று மன்னித்து அருள வேண்டும்.

நான் சொல்றது தான் கரெக்ட்
நீ என்ன வேணும்னாலும் சொல்லு. நான் சொல்றதுதான் கரெக்ட். இப்படியும் சில நண்பர்கள் பேசுவார்கள். அவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற ரீதியில் பேசுவர். அவர்கள் விட்டுக்கொடுக்காவிட்டாலும், நாம் தான் அவர்களுக்காக ஏதோ ஆசைக்குப் பேசுகிறார். பேசிவிட்டுப் போகட்டும் என்று பெருந்தன்மையாக விட்டுக் கொடுக்க வேண்டும். என்றைக்கும் விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை.

என்ன தான் நெனச்சிக்கிட்டிருக்கே உன் மனசிலே
கோபம் விர்ரென்று வரும்போது வெளிப்படும் வார்த்தைகள் இவை. மனதுக்குப் பிடித்தவர்கள் மேல்தான் இதுபோன்ற கோப உணர்வுகள் வெளிப்படும். அதற்கான காரணத்தை ஆராய்ந்து தீர்வை காண முயல வேண்டும். அதை விட்டுவிட்டு மேலும் மேலும் கோபப்பட்டு, உங்கள் அன்பிற்குரியவர்களையும் சோகத்தில் மூழ்கடித்து விடக்கூடாது.

கலக்குற, போ...
நண்பர்கள் ஒருவருக்கொருவர் பாராட்டும்போது இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவர். இந்த வார்த்தைகள் சக நண்பர்கள் வெற்றி பெறும்போது ஆத்ம நண்பரின் மூலம் வெளிப்படுகின்றன. இதுபோன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தலாம். தவறில்லை. ஆனால், இதே வார்த்தையைக் கொண்டு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக ஐஸ் வைக்கிறார்களா என்றும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

என் கண்ணுக்குள்ளேயே இருக்க...
இது காதலியைப் பார்த்து காதலன் உதிர்க்கும் வார்த்தைகள். நீ எப்போதும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கன்னு சொல்வான். அதேபோல், ஏதேனும் கோரவிபத்தைப் பார்க்க நேர்ந்தால், நாம் அது என் கண்ணுக்குள்ளே நிக்கு என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.
எல்லாம் நம்ம கையிலயா இருக்கு?
இது விதியை நம்புகிறவர்களின் வேதனை கலந்த வார்த்தை. விதி ஒரு பக்கம் இருந்தாலும், அதற்காக விதியை நம்பி, முயற்சி எதுவும் செய்யாமல் இருந்துவிடக் கூடாது. இவர்கள் தான் போகப்போக.. என்னத்த செஞ்சி...என்னத்த பண்ண..ன்னும் சொல்வார்கள்.

மசமசன்னு நின்னுட்டே இருக்காதே...
இப்படி சொன்னா மளமளன்னு வேலையை முடின்னு அர்த்தம். இவங்க எப்பவும் பொடுபொடுன்னுட்டே இருப்பாங்க. சிடுமூஞ்சி மாதிரி கோபப்படுவாங்க. எப்பவும் எதற்காகவும் சுயகவுரத்த விட்டுக்கொடுக்காதவங்க தான் இவங்க.

சே...என்னமா புழுங்குது..!
வெய்யில் கொளுத்தற நேரத்தில் இந்த வார்த்தைகள் சட்டென்று வெளிவரும். உடனே தோள்ல கெடக்குற துண்டை எடுத்து விசிறியாக்கி வீசுவர். அப்போ, கொஞ்சம் ஜில்லுன்னு காத்து உடம்பு மேல படும். அப்போதுதான் உஷ்...அப்பாடன்னு நிம்மதியுடன் பெருமூச்சு விடுவர்.

செத்த நேரம் இரு...வர்ரேன்...
உனக்கெல்லாம் ஒரு நேரங்காலம் தெரியாது என்று ஆதங்கப்படுபவர்கள் தான் இவர்கள். உறவினர் வீட்டுக்கு தன் மகனை அழைத்துச் சென்றிருப்பாள், அம்மா. அங்கு அம்மாவும், அத்தையும் சொந்தக் கதை, சோகக்கதை எல்லாம் ஆசுவாசமாக ரொம்ப இன்ட்ரஸ்ட்டா பேசிக்கிட்டு இருப்பாங்க. அப்போ பார்த்து மகன் பொறுமை தாங்காமல், எம்மா...வீட்டுக்கு வா...போவும்...ன்னு கெஞ்சாத குறையா கேட்டுக்கிட்டே இருப்பான்.
தொண தொணன்னுட்டு இருக்காத...செத்த நேரம் இரு...வர்ரேன்...னு அம்மாகிட்ட இருந்து பதில், அசால்ட்டா வரும்.

வர்ரணும்னு நெனச்சேன்...ஆனா வரமுடில
எப்பவுமே இந்த வார்த்தையைப் பயன்படுத்தி, தான் தப்பிக்கிறதுக்கு பாதுகாப்புக் கவசம் போல வைத்துக் கொள்வார்கள். வேற ஒண்ணுமில்ல. செய்ற காரியங்கள்ல பொறுப்பில்லாதவர்கள் பேசும் பேச்சு தான் இது. இதுக்கு வேறு சில வார்த்தைகளையும் இப்படி உதாரணமாக சொல்லலாம்.
வண்டி லேட், கால்ல முள் குத்திருச்சி...ஆமால்ல...மறந்தே போச்சு.... அட, நீதான் வருவேன்னு நெனச்சிக்கூடப் பார்க்கல....இதற்கான விளக்கங்களை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறோம்.

சில நண்பர்கள் இதற்கு பதிலை இப்படியும் வேடிக்கையாகச் சொல்வர். உனக்கெல்லாம் சூடு, சொறணை, வெட்கம், மானம், ரோஷம்னு எதுவுமே கெடயாதா..? இவங்களுக்கெல்லாம் நாம் சொல்லும் ஒரே பதில்...இதுதான் இப்படியே போனா கஷ்டம்தான்பா....இன்னும் சிலர் இப்படியும் சொல்வாங்க. என்ன நடந்தா நமக்கென்ன? நம்ம வயிறு நெறயுதான்னு பாருங்க இப்படி சொல்றதுக்கும் ஆள் இருக்கு. அதுக்குத் தான் முதல்லயே தலைப்ப இப்படி கொடுத்தோம்.

நமக்கு எதுக்குப்பா வம்பு?

1 Responses to “நமக்கு எதுக்குப்பா வம்பு?”

Yaathoramani.blogspot.com said...
May 29, 2011 at 6:31 PM

இன்றுதான தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
வித்தியாசமாக சிந்தித்து
இயல்பான மொழியில் எழுதுகிறீர்கள்
பயனுள்ள நல்ல பதிவுகள்
தொடர வாழ்த்துக்கள்


Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby