Sunday, May 22, 2011
அறிவுரை சொல்லலாமா?
Do you like this story?
அறிவுரைகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அவற்றைக் கடைபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அதனால் தான் அறிவுரைகளை அனைவரும் இஷ்டத்திற்கு அள்ளி வீசுகிறார்கள்.
அவர்கள் தங்களை விட திறமை குறைந்தவர்களிடம் தான் மெத்தப்படித்த மேதாவிகளைப் போல அறிவுரைகளை தயங்காமல் அள்ளி வீசுகின்றனர்.
அறிவார்ந்த பெரியோர்கள் என்ற நிலையில் இருப்பவர்களும், சமுதாயத்தில் யாரும் அறியாத நிலையில் இழிவான செயல்களில் ஈடுபடுவதை நாம் தினசரி செய்தித்தாள்களில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
அப்படி என்றால் யார் பெரியவர்? யார் சிறியவர் ? வயதில் மூத்தவர்களும், கல்வியில் சிறந்தவர்களும், உயர்சாதிக்காரர்களும், பணக்காரர்களும், பதவியில் உள்ளவர்களும் தான் நம் கண்களுக்கு பெரியவர்களாகத் தெரிகிறார்கள். அவர்களுக்குத் தான் மாலை, மரியாதை, மதிப்பு, அந்தஸ்து என்று எல்லாவற்றையும் சமர்ப்பிக்கிறோம். அதனால்தான் சமுதாயத்தில் இவன் உயர்ந்தவன் என்றும் அவன் தாழ்ந்தவன் எனறும் பெரிய ஏற்றத்தாழ்வு உண்டாகிறது.
ஒருவரது வெளித்தோற்றத்தை வைத்தே நாம் எடைபோட்டு விடுகிறோம்.
அவர் செயலை அடுத்ததாகத் தான் பார்க்கிறோம். இதனால் தான் ஒருவருக்கொருவர் தவறான புரிதல்கள் ஏற்படுகின்றன. பொதுவில் யார் பெரியவர் என்பதில் போட்டி போட வேண்டிய அவசியமே இல்லை. எல்லோரும் ஒன்றுதான். அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக காரணம் தெளிவான புரிதல்கள் இல்லாமைதான் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருநாள் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய் வேதனையோடு வந்து நின்றாள். என் மகன் எப்போதும் சர்க்கரையையே தின்று கொண்டிருக்கிறான். வேறு எதையும் சாப்பிட மறுக்கிறான். தாங்கள் தான் அவன் நல்ல உணவுப்பழக்கத்தை கையாள தயைகூர்ந்து அருள்புரிய வேண்டும் என்று வேண்டி நின்றாள். அதைக் கேட்ட பகவான் ராமகிருஷ்ணர், தாயே, தாங்கள் இன்று போய் நாளை வாருங்கள். உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்றார்.
மறுநாள் அவர் அந்த சிறுவனிடத்தில் சர்க்கரையை அதிகளவில் சாப்பிடுவதால் உண்டாகும் கெடுதல்கள் பற்றியும், அதைக் கைவிடுமாறும் விளக்கமாக எடுத்துக் கூறினார். சிறுவனும் அவரது அறிவுரையை ஏற்றுக் கொண்டான்.
அந்த தாய் விடைபெறும்போது, சுவாமி இந்த ஆலோசனையை தாங்கள் நேற்றே ஏன் சொல்ல வில்லை என்று கேட்டாள். அதற்கு பகவான் அமைதியாக, நேற்று வரை நானும் சர்க்கரையைத் தான் தின்று கொண்டிருந்தேன். நானே தவறு செய்து கொண்டிருக்கும்போது, மற்றொருவரை அதைச் செய்யாதே என்று எப்படி அறிவுரை கூற முடியும் என்றார்.
இதுபோன்ற செயலைச் செய்பவர்கள் தான் பெரியவர்கள். அதனால்தான் வள்ளுவரும் சொல்கிறார்,
செயற்கரிய செய்வார் பெரியர், சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
அறிவுரை கூறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த அறிவுரையை நாம் கடைபிடிக்கிறோமா என்று தெரிந்து கொண்டு கூறுவதே சான்றோருக்கு அழகு.

Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “அறிவுரை சொல்லலாமா?”
Post a Comment