Thursday, May 19, 2011

என்ன சத்து இந்த நேரம்...

இந்த கொளுத்தும் கோடை வெயிலில் என்ன சத்து நமக்குத் தேவை. நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் எந்தெந்த உணவில் உள்ளன என்று பார்ப்போம்.

காய்கறிகள்

காய்களில் கத்தரி, வெண்டை, முருங்கை, காளான், முள்ளங்கி, பூசணி, கொத் தவரங்காய், சுண்டைக்காய், பூசணி, பரங்கிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய்,  புடலங்காய், அவரை, வெள்ளரிக்காய், வாழைக்காய், பீட்ரூட் முக்கியமானவை.

கத்தரிக்காய்:
வாய்வு, பித்தம், கபம் விலகும். அம்மை நோய்க்கு மருந்து.
வெண்டைக்காய்: வறண்ட குடலை பதப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். உஷ்ண இரு மலை அகற்றும். விந்து ஒழுக்கம் சரியாகும். நீரிழிவு நோய் குணமாகும்.
முருங்கைக்காய்: உடலை வலுப்படுத்தும். உடல் சூட்டை அதிகரிக்கும். சிறுநீரும்,  தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். மலச்சிக்கல், கண்நோய், வாய் புண்ணுக்கு  உகந்தது.

காளான்: மார்பக புற்றுநோயைத் தடுக்கும். ரத்த அழுத்தம், நீரிழிவுக்கு நல்லது. உடல்  பருமனை குறைக்கும்.
முள்ளங்கி: கண் பார்வைக்கு நல்லது. மலச்சிக்கலை குணப்படுத்தும். வயிற்று எரிச்சல்,  புளித்த ஏப்பத்தைத் தடுக்கும். தீப்புண்களுக்கு அருமருந்து. பெண்களின் கருச்சிதைவை  தடுக்கும்.
பூசணிக்காய்: பெண்களின் உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். பித்தம் தணிக்கும். குண் டானவரை ஒல்லியாக்கும். நரம்புத்தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவெட்டை, பிரமேக  நோய், சிறுநீர் வியாதிகளுக்கு அருமருந்து. உடல் சூட்டைத் தணிக்கும். உடல் வலி  போகும். புத்தி சுவாதீனத்துக்கு ஏற்றது.

சுண்டைக்காய்: உடலை வலுவாக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். உடல் சோர்வை  நீக்கும். மலச்சிக்கலைத் தடுக்கும். செரிமானம் கூடும். குடல்புண் ஆறும். நீரிழிவால்  உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், வயிற்றுப்பொருமல் நீங்கும்.
சுரைக்காய்: உடல் சூட்டைத் தணிக்கும். தேகம் வலுப்பெறும். சீதளம், பித்தத்தை  போக்கும். சிறுநீரை பெருக்கும். ஆண்மை பெருகும்.
பாகற்காய்: உடலை உரமாக்கும். சிறுநீரை பெருக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.  வயிற்றுத் தொந்தரவு நீங்கும். ரத்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்கும். பித்தத்துக்கு  மாமருந்து.

புடலங்காய்: உடல் சூட்டைத் தணிக்கும். அஜீரணத்தை அகற்றும். வாதம், பித்தம்,  கபத்தால் வரும் திரிதோஷங்களைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப்பூச்சி  பிரச்சினைகளுக்கு நல்லது.
அவரைக்காய்: உடல் வலுவாகும். காம உணர்ச்சி பெருகும். உடலுக்கு குளிர்ச்சி. ரத்த  அழுத்தம் சீராகும்.
வெள்ளரிக்காய்: உடலுக்கு குளிர்ச்சி. ரத்தத்தில் சிவப்பணுக்களை விருத்தியாக்கும்.  ஈரல், கல்லீரலின் சூட்டைத் தணிக்கும். பித்தத்தைக் குறைக்கும். உள்ளரிப்பு, கரப்பான்  போன்ற சரும நோய்களை விரட்டும். மூளைக்கு வலிமை தரும்.
வாழைக்காய்: ரத்தத்தை விருத்தியாக்கும். உடம்பை குண்டாக்கும். வயிறு இரைச்சல்,  இருமல் நீங்கும். மலத்தை இறுக்கும். புளிச்ச ஏப்பத்தை விரட்டும்.
கொத்தவரங்காய்: சிறுநீரை பெருக்கும்.



பழங்கள்

கனிகளில் வாழைப்பழம், பேரீச்சம்பழம், பப்பாளி, கொய்யா, நெல்லி, சீதாப்பழம்,  ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம், சாத்துக்குடி, சப்போட்டா, தர்பூசணி, எலுமிச்சம்பழம்,  திராட்சை, மாதுளை, அன்னாசி, பலா, முந்திரி, இலந்தப்பழம், நாவல் பழம், புளி,  விளாம்பழம், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, செர்ரி பழம், பிளம்ஸ், அத்திப்பழம், துரியன்  பழம் போன்றவை முக்கியமானவை.

வாழைப்பழம்: செரிமான மண்டலம் சீராக இயங்கும். மலச்சிக்கல் போக்கும். பித்தம்  தணியும். சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் ரத்த அழுத்த நோய்க்கு நல்லது. மொந் தன் பழம், காமாலையை விரட்டும். மலைவாழை சோகைக்கு அருமருந்து. பேயன் வாழை குடற்புண்ணைப் போக்கும்.
பேரீச்சம்பழம்: ரத்தம் விருத்தியாகும். சருமம் பளபளப்பாகும். கண்கோளாறுகள்  வராது. இருமல், கபம் போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல மருந்து.
பப்பாளி: சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்து. நரம்புகள் பலமாகும். ஆண்மை விருத் தியாகும். ஞாபகசக்தி மேம்படும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
கொய்யா: இதயத்தை வலுவூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். வாந்தி, பேதி நிற்கும்.  அஜீரணக்கோளாறுகளை அகற்றும். விக்கலுக்கு அருமருந்து.
நெல்லி: மரணத்தை வெல்லத்தக்க மருத்துவ குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. இளை த்த உடம்பை பெருக்கும். பல், ஈறு நோய்கள் அகலும். வாய்வுத் தொல்லை நீங்கும்.  குளிர்காய்ச்சல் விலகும். செரிமான குறைவுக்கு அருமருந்து.

சீதாப்பழம்: மலச்சிக்கல் நீங்கும். பருக்களை அகற்றும். தலைமுடி மிருதுவாகும். பேன்,  பொடுகு தொல்லையில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். குளிர்காய்ச்சல் நீங்கும்.  இதயம் பலப்படும்.
ஆரஞ்சு: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வாழ்நாளில் இளமைக்காலத்தை  நீட்டிக்கும். பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். பல்சொத்தை வராது.
ஆப்பிள்: ஆயுள் நீடிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் கொழுப்பை  கரைக்கும். கீல்வாதம், இடுப்புச்சந்து வாதம், தொடைவாதம், நரம்பு வியாதிகள் அக லும். மூளைச்சோர்வை நீக்கும். ரத்த அழுத்தம் கட்டுப்படும்.

மாம்பழம்: தீராத தலைவலியும் தீரும். சரும நோய்களை அகற்றும். பல், ஈறு  வலியைக் குணப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மாலைக்கண்நோய்,  கண்ணில் நீர் வடிதல் பிரச்சினைகளுக்கு நிரந்தர நிவாரணி.
சாத்துக்குடி: பசியைத் தூண்டும். மூளைச் செல்களை பலப்படுத்தும். ரத்த அழுத்தத் திற்கு நல்லது. கர்ப்பப்பையை பலமாக்கும்.
சப்போட்டா: தினமும் ஒரு பழம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராது. சிறுநீரக கல் லை கரைக்கும். வயிற்று உபாதைகள் அகலும்.
எலுமிச்சம்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும்.  ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
திராட்சை: இதயநோய்கள் அகலும். குடல்புண் ஆறும். கல்லீரல் கோளாறுகள் நீங்கும்.  நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாகும். மாதவிடாய் கோளாறுக்கு மாமருந்து.

மாதுளை: மலச்சிக்கலைப் போக்கும். வறட்டு இருமல் அகலும். பித்த நோய்கள் தீரும்.  சீதபேதி நோய்க்கு நிரந்தர நிவாரணி.
அன்னாசி: உடல் வலுப்பெறும். ரத்தம் விருத்தியாகும். பித்த நோய்கள் அகலும். பெ ண்களுக்கு வெள்ளைப்படுதல் நிவர்த்தியாகும்.
பலா: உடல் வளர்ச்சிக்கும், வலிவுக்கும் ஏற்ற பழம். பல் ஈறு கெட்டியாகும். தொற்று  நோய் அண்டாது. உடலுக்கு குளிர்ச்சி. தசைகளின் இயக்கம் சீராகும். தோல் வறட் சிக்கு மாமருந்து.
இலந்தப்பழம்: மூளையை சுறுசுறுப்பாக்கும்.
நாவல்பழம்: கல்லீரல் கோளாறு நீங்கும். குடல்புண்ணை அகற்றும். நீரிழிவுக்கு அரும ருந்து.

புளி: உடல் கிருமிகளை அகற்றும். மூளைக்காய்ச்சலுக்கு அருமருந்து. தேமல், சொறி,  கரப்பான் போன்ற நோய்களை அகற்றும். குடல்நோய் குணமாகும்.
விளாம்பழம்: அல்சருக்கு அருமருந்து. பித்தநோய்கள் குணமாகும்.
பேரிக்காய்: பற்கள், எலும்புகள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல்,  சீரண உறுப்புகள் வலுப்பெறும்.
ஸ்ட்ராபெர்ரி: ரத்த நாளங்களில் அடைப்பை போக்கும். பற்களின் கறையை நீக்கும்.
செர்ரி பழம்: கர்ப்பப்பை வியாதிக்கு நல்லது.
அத்திப்பழம்: சுவாசக்கோளாறுகளை அகற்றும். வாய்துர்நாற்றம் போக்கும். வெண்கு ஷ்டத்துக்கு அருமருந்து.
பிளம்ஸ்: மார்பகப் புற்றுநோய்க்கு நல்லது.
முந்திரி: சிறுநீரக கல்லடைப்பை நீக்கும்.
தர்பூசணி: நீரிழப்பை தடுக்கும். இதய நோய்க்கு நல்லது. வயிற்றுக்கோளாறுகளை  அகற்றும்.
துரியன் பழம்: குழந்தை பாக்கியம் கிட்டும்.

0 Responses to “என்ன சத்து இந்த நேரம்...”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby