Tuesday, March 15, 2011
2011 அழிவின் ஆரம்பமா?
Do you like this story?
ஜப்பானை சுனாமியின் கோர அலைகள் சூறையாடியுள்ள நிலையில் உலகத்தின் அழிவை நிரூபிக்கும் வகையில் வெளிவந்திருக்கும் படம் 2011.
விண்வெளியில் இருந்து பூமியைத் தாக்கும் வகையில் வேகமாக நெருங்கி வந்து கொண்டிருக்கிறது ஒரு எரிகல் என்கிறது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். அதனால், மக்கள் பீதி அடைய ஆரம்பிக்கின்றனர். நமக்கும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அதன் பிறகு தான் அது எரிகல் அல்ல... ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள்..
அவர்களின் கோரதாண்டவம் உலகையே அச்சுறுத்துகிறது. இந்நிலையில் அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க அமெரிக்க ராணுவம் புறப்படுகிறது. ராணுவ வீரர்கள் அவர்களது தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். அதற்குள் 20 நாடுகளை சூறையாடி விடுகின்றனர், ஏலியன்ஸ். இறுதியில் ஜெயிப்பது யார்? உலகம் அழிந்ததா என்பதே 2011.
கொலம்பியா பிக்சர்சின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இந்த ஹாலிவுட் படம் தமிழாக்கத்துடன் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள சான்டா மெரிட்டன் விமான நிலையத்தில் இருந்து ராணுவ வீரர்கள் ஏலியன்சை எதிர்த்து ராணுவம் மக்களை காப்பாற்றுவதில் இருந்து படம் விறுவிறுப்பாக
செல்ல ஆரம்பிக்கிறது.
ஹாலிவுட் படத்திற்கே உரிய துப்பாக்கிக் குண்டுகளின் சீற்றம், வெடிகுண்டுகள் சப்தம் காதை பிளக்கிறது. ராணுவ வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள காதல், சோகம், வீரம் அனைத்தையும் அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறது, 2011.
மொத்தத்தில் போர்க்களத்தில் இருந்து படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது 2011.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “2011 அழிவின் ஆரம்பமா?”
Post a Comment