Wednesday, January 14, 2015
பொங்கட்டும் புதுவிழா
Do you like this story?
இளஞ்சூரியன் உதிக்கும் முன்னே
பச்சரிசி மாக்கோலமிட்டு
தலைவாழை இலை போட்டு
வகைவகையாய் படையலிட்டு
புத்தாடைதனை உடுத்தி
முத்தாய்ப்பாய் பொங்கல் வைப்போம்!
கொடை கொடுக்கும் இயற்கைக்கு
நன்றி சொல்லும் திருவிழா
பொன்னான பூமிக்கு
பொலிவு சேர்க்கும் புதுவிழா!
கட்டிளம் காளை யருக்கு
வீரம் சேர்க்கும் பெருவிழா
தமிழர்தம் பெருமைக்கு
மெருகு ஏற்றும் கலைவிழா!
கண்ணியத்தைக் கட்டிக் காக்கும்
கவிமயமான திருவிழா
ஒற்றுமைக்கு வலிமை சேர்க்கும்
ஓவியமான ஒருவிழா
போலிகளை போகியயன
பொசுக்கி மலரும் திருவிழா
பொறுமையுடன் ரசிக்க வைக்கும்
ரம்மியமான கலைவிழா!
நீலநிறக் கடலினிலே
வெள்ளொளியில் கடலலைகள்!
தேக்குமர ஓடமாய்
மிதந்து வரும் நினைவலைகள்!
இன்பமான தருணங்களை
இனிமையாக்கும் நினைவுகள்
பொங்கும் புது உள்ளத்தில்
பொங்கலைப் போல் என்றுமே!
பாரதிசங்கர்
முக்காணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “பொங்கட்டும் புதுவிழா”
Post a Comment