Friday, October 28, 2016

தீபாவளியும் பொங்கும்



விசாலமான மனம் நாடுகிறது
மத்தாப்பூ போன்று நெஞ்சம்
எப்போதும் ஒளி வெள்ளம் பாய்ச்சாதா என்று!

தேகம் புத்தாடை அணிகிறது
இனியாவது நல்லபடியாக
உடலை பேண வேண்டும் என்ற எண்ணத்தில்!


தலை ஆசாபாசமாய் எண்ணெயை தேய்த்துக்கொள்கிறது
இனியாவது தன்னம்பிக்கை எனும் பசை தலையில் ஊறாதா என்று!

எப்பேர்ப்பட்ட வேலையையும் எளிதாக செய்யலாம்
எளிதான பிரச்சனையும் கடினமாக தோன்றலாம்
எண்ணம் ஈடேற ஒத்துழைக்கும் மனது
தன்னலத்தையே நாடுகிறது!

சுயநலம் என்ற பச்சாதாபம் ஒழியுமாயின்
பொதுநல நோக்கில் உள்ளம் பூத்துக்குலுங்கும்
அன்று பொங்கல் மட்டும் பொங்காது!
தீபாவளியிலும் மனம் பொங்கலாய் பொங்கும்
மகிழ்ச்சி எனும் இன்ப வெள்ளத்தில்!

நாநலன் என்றும் நயமுடன் இருக்க
வேறொன்றும் அறியேன் பராபரமே!

-பாரதி சங்கர்
முக்காணி   



0 Responses to “தீபாவளியும் பொங்கும் ”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby