Thursday, January 1, 2015

புத்தாண்டு வாழ்த்துக்கள்

நான் இறந்தாலும் எனக்கு கவலையில்லை
எண்ணத்தால் எழுத்தால் குணத்தால்
உலகம் முழுவதும் நான் சுதந்திரமாக
சுற்றிக் கொண்டிருப்பேன்...!

எது நடந்தாலும் பரவாயில்லை
எல்லாம் நன்மைக்கே என்பேன் நான்
காலத்தால் அழியாதது
காரணத்தை அறியாதது !

உண்மையே மூலமாய்
கர்மமே கடவுளாய்
காற்றைப் போல் சுதந்திரமாய்
மூச்சைப் போல் சுவாசமாய்..!

மண்ணில் நடமாடும்
மாமனிதர்களுக்கு மத்தியில்
மறைந்திருந்து மாயம் செய்யும்
காரணகர்த்தாவாக
விளங்க இயலாத கவிதைப் போல்!

தயவு செய்து
சத்தியம் செய்யுங்கள்
இனியேனும் தவறிகூட தவறு
செய்யமாட்டேன் என்பதை
பண்டிகைக்கால யுக்தியாக
கையாளாமல்
வார்த்தை அலங்காரமாக
இல்லாமல்
இனியாவது சத்தியமாக
கடைபிடிப்பேன் என்று!

இன்னும் பல நூற்றாண்டு
அனைவரும் வாழ
வழியமைக்கும் என நம்புவோம்
நம் இயற்கையயனும் மகாசக்தியை!



அனைவருக்கும்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்புடன்
பாரதிசங்கர்
முக்காணி

0 Responses to “புத்தாண்டு வாழ்த்துக்கள்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby