Friday, November 14, 2014
தூய்மை இந்தியாவின் தூய நாயகன்
Do you like this story?
இந்தியாவை சுத்தப்படுத்தும் வகையில் தூய்மையான இந்தியா-2014 என்ற திட்டத்தை தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 2-ந் தேதி தொடங்கி வைத்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தில் தங்கçe இணைத்துக்கொண்டு பணியாற்றுமாறு நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான்கான், நடிகை பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தை பொறுத்தவரை தூய்மை இந்தியா திட்டத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் இதனை தனக்கு கிடைத்த ஒரு பெருமையாகவே ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 60-வது பிறந்தநாçe கொண்டாடினார். பிறந்த நாளான நேற்று தனது நற்பணி இயக்கத்தினருடன் சென்னை மாடம்பாக்கம் ஏரியில் இருந்து தூய்மை இந்தியா திட்டத்தை ஆரம்பித்தார்.
இந்த விழா தாம்பரம்- வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள ராஜகீழ்ப்பாக்கம் சந்திப்பு மாடம்பாக்கம் ஏரி அருகில் கொண்டாடப்பட்டது. காலை 10 மணிக்கு கருப்பு ஆடை அணிந்து நடிகர் கமல்ஹாசன் விழா மேடைக்கு வந்தார். பின்னர், ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை அவர் தொடங்கி வைத்தார். அப்போது நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே, ரத்ததானம், கண்தானம் என்று எனது ரசிகர் நற்பணி இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதை நான் பெருமையாக எடுத்துக்கொள்கிறேன். தூய்மை இந்தியா திட்டத்தை உண்மையிலேயே இந்த மண்ணில் விதைப்பவர் கள் நீங்கள் தான். அதில் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இது இந்தியாவின், ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட. எனவே இந்த திட்டத்தில் மத, இன, மொழி என எந்த பேதமும் இன்றி செயல்படுங்கள். ஏனெனில் நமக்குள் எப்போதும் பாகுபாடு இருக் கக்கூடாது, பார்க்கக்கூடாது. நேசம் ஒன்று மட்டும்தான் நம்மிடையே இருக்க வேண்டும்.
வழக்கமாக எல்லாரும் பிறந்தநாள் விழாக்கçe கேக் வெட்டி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். கேக் வெட்டி மகிழ்ச்சி அடைவதை விட, குப்பையை வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதை பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
இதுபோன்று நாம் அனைவரும் இந்தியாவை சுத்தப்படுத்த முனைப்பாக ஈடுபட வேண்டும். அப்படி செய்தால், எதிர்காலத்தில் இந்தியா வல்லரசாக மட்டுமின்றி, நல்லரசாகவும் மாறும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு, உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன்.
என்றைக்கும் தனிமரம் தோப்பாகாது. எனவே நாம் அனைவரும் இந்த திட்டத்தில் செயல்பட வேண்டும், நாம் வாழும் பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனது பிறந்தநாளில் எனக்கு மலர்மாலை, சால்வை அணிவிப்பது, பரிசு கொடுப்பதை விட, நல்ல புத்தகங்கள், மருந்துகள் கொடுங்கள்.
இல்லையயன்றால், இந்த ஏரிப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான கருவிகçe கொடுங்கள். ஏனெனில், உங்கள் அன்பு எனக்கும், நாட்டுக்கும் பிரயோஜனமாக இருக்கட்டும். பல இடங்களில் நான் இருமல் மருந்துகçe கூட பரிசாக வாங்கியிருக்கிறேன்.
இந்த திட்டத்தில் சேரும்படி எனக்கு மோடி அழைப்பு விடுத்து விட்டார் என்பதற்காக மட்டுமல்ல, இந்திய குடிமகனான எனக்கும் இதில் கடமையாற்றும் பங்கு இருக்கிறது என்பதற்காகத்தான் இதில் நான் ஈடுபட்டுள்¼eன்.
-கமல்ஹாசன்
சரசர கேள்விகள்- பரபர பதில்கள்
அரசியல் பிரவேசமா?
கேள்வி: அரசியல் உணர்வோடு தான் இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கெடுத்து உள்ளீர்களா?
பதில்: ஓட்டுபோடும் எல்லாருமே அரசியல்வாதிகள் தான். எல்லாருமே குடிமகன் கள் தான். அந்தவகையிலே நானும் இந்த பணியில் ஈடுபட்டதில் தவறில்லை. அது என் கடமை.
கேள்வி: சென்னையில் மட்டும் தூய்மை இந்தியா திட்டம் செயல்படபோகிறதா?
பதில்: தமிழகத்தில், சீர்காழி, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, ராஜபாçeயம், நெல்லை, காரைக்குடி உள்ளிட்ட 20 இடங்களில் தூய்மை இந்தியாவுக்கான திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம்.
கேள்வி: நீங்கள் தற்போது நடித்து வரும் உத்தம வில்லன், பாபநாசம் இந்த 2 படங்களில் எந்தப்படம் முதலில் திரைக்கு வரும்?
பதில்: உத்தம வில்லன் திரைப்படம் தான் முதலில் திரைக்கு வரும். பாபநாசம் படம் தொடர்பாக இப்போது எதுவும் சொல்லமுடியாது.
கேள்வி: பா.ஜ.க.வில் சேர நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது அரசியல் பிரவேசம் சாத்தியமா?
பதில்: என்னை பற்றி கேட்டால், நான் பதில் சொல்ல முடியும். அதைவிட்டு யாரோ ஒருவரை சுட்டிக்காட்டி அவர் யார்? அவரது பெயர் என்ன? என்று கேட்டால் நான் எப்படி சொல்லமுடியும். உங்கள் கேள்விக்கு எப்படி நான் கருத்துக்கூற முடியும்?
கேள்வி: மணி விழா காணும் நீங்கள், மக்களுக்கு கூற விரும்புவது என்ன?
பதில்: என் மீது அன்பு வைத்திருக்கும் தமிழக மக்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டு இருக்கிறேன். எனது பிறந்தநாள் விழாவினை, தூய்மை இந்தியாவுக்கான திட்டமாக மாற்றிக்காட்டிய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் நன்றி.
ஒரு காலத்தில் ஏதாவது ஒரு கேமிரா கூட என்னை பார்க்காதா? என்னை படம் பிடிக்காதா? என்று ஏங்கியிருக்கிறேன். கவலைப்பட்டு இருக்கிறேன். ஆனால், இன்று எனக்காக, என்னை பார்க்க இத்தனை கேமிராக்கள் (பத்திரிகையாளர், போட்டோகிராபர்கçe நோக்கி) வந்திருக்கின்றன. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும். எனது சினிமா பயணம், பொதுப்பயணம் இரண்டுமே என்னை பெருமையடையச் செய்திருக்கின்றன. தமிழக மக்களுக்கு என்றென்றும் நன்றி.
-கமல்ஹாசன்
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “தூய்மை இந்தியாவின் தூய நாயகன் ”
Post a Comment