Monday, April 14, 2014
புத்தொளி பிறக்கட்டும்
Do you like this story?
புத்தாண்டின் புதுநாளில்
புதுமைகள் கலந்திட
சீர்கொண்டு நேராக
அரும்பணிகள் ஆற்றிட!
கலைகள் பலவும் கற்றிட
காவியங்கள் புதிதாய் படைத்திட
பெற்றோர் பெயரைக் காத்திட
மாற்றான் மனமும் மயங்கிட
ஒற்றுமை வளர்ந்திட
ஓயாது உழைத்திட
கற்ற வித்தை யாவையும்
பிறழாது செய்திட!
உற்ற நட்பைக் காத்திட
பெற்ற செல்வம் வளர்ந்திட
பெற்றோரை பேணிட
ஊரும் பேரும் போற்றிட!
உயர்ந்த எண்ணம் ஓங்கிட
ஒழுக்கம் விரும்பி பழகிட
பார்வை புதிதாய் மலர்ந்திட
விவேகம் வெற்றிக்கு அழைத்திட!
பாதை தெளிவாய் மாறிட
மாற்றம் ஏற்றமாய் ஜொலித்திட
தோற்றம் பொலிவு கண்டிட
வளமை என்றும் சேர்ந்திட!
இயற்கை வளத்தை பெருக்கிட
இனிமை வந்து சேர்ந்திட
தேவையே சேவையாய் ஆகிவிட
வாழ்வில் உன்னதம் பெற்றிட!
புத்தொளி பிறக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டில்!
பாரதி சங்கர்
முக்காணி.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “புத்தொளி பிறக்கட்டும்”
Post a Comment