Sunday, March 17, 2013

இன்னும் எத்தனை வேதனை சாதனையாய்...!

இன்னும் எத்தனை வேதனை
தாங்குமோ நெஞ்சம்
அத்தனை வேதனை சாதனையாய்
மாறிடும் காலங்கள் வந்திடுமே


வாழ்க்கையில் யாவும் சந்திக்கும்வேளை
எல்லோரும் கற்கும் பாடங்கள்தானே
நினைவுகள் நெஞ்சை தீண்டிடும் போது
தேவைகள் வந்து சாமரம் வீசும்!

எந்தன் சிந்தையில் ஒன்றும் இல்லாதபோதும்
ஏனின்று வந்தது செந்நிற கோபம்!
மனம் மாயையில் மூழ்கிடும் மூழ்கிடும் வேகம்
வந்த சுழலும் சூழலில் நொந்ததே பாவம்!

கொட்டடா கொட்டடா மானிடா
கை தட்டடா தட்டடா வீரமாய்
எட்டுத் திக்குகள் எட்டட்டும் வேகமாய்
பொசுங்கட்டும் பொல்லாத மானுடம்!

என்றும் சத்தியம் எங்குமே வாழுமே
மண்ணில் ரத்தங்கள் சிந்திய போதிலும்
கையில் முத்தங்கள் வந்துதான் சேருமே
வெற்றிப்பூக்களும் மாலையாய் மாறுமே!

ரணங்களை நெஞ்சில் சுமந்திடும் நெஞ்சம்
வலிகளும் உனக்கு சுகச்சுமைதான்
மனங்களை வென்றிடும் மானிட பந்தம்
மயக்கங்கள் போக்கிடும் வீரத்தின் உச்சம்!

தடைகளை தாண்டித்தான் வந்தோமே நாம்
இனி சோகங்கள் வேதனை எல்லாமும் தீயில்
போகியாய்  கொஞ்சம் பொசுங்கட்டுமே
தாகங்கள் தவியாய் தவிக்கின்ற போதும்
நீரிலே மூழ்கியே முத்தெடுப்போமே!

பாரதி சங்கர்.

0 Responses to “இன்னும் எத்தனை வேதனை சாதனையாய்...!”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby