Sunday, March 17, 2013

நான் ஒரு பரதேசி!

என்னை விட்டு எதுவும் விலகவுமில்லை
என்னை விட்டு எதுவும் நீங்கவும் இல்லை
ஏயன்றால் என்னிடம் எதுவுமில்லை
 நான் ஒரு பரதேசி!!
ஆம். இயற்கையுடன் இணைந்த பரதேசி!


எனக்கு தூரங்கள் தொல்லையில்லை
எவ்விழிகளும் என்னை நோக்கவுமில்லை
வியப்புக்கிங்கே இடமும் இல்லை
விழிப்பவர் எங்கும் நிரந்தரமில்லை!!

இறப்புக்கு பின்னால் வாழ்பவர் உண்டு
இருக்கும்போது வாழ்வாரில்லை!!
இறந்தும் வருந்தும் துயரம் உண்டு
இருக்கும்போது வருத்தம் இல்லை!!!

உண்மையை உரைக்க தொடரும் தொல்லை
விவரங்கள் அறிய பக்குவம் இல்லை-இதை
இனிவரும் இளையோர் அறிந்திட்டாலே
எதிர்வரும் காலம் வசந்தமாய் மாறும்!!

‡பாரதிசங்கர்

0 Responses to “நான் ஒரு பரதேசி!”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby