Sunday, March 17, 2013

பாம்பின்கால் பாம்பறியுமோ?

பாம்பின்கால் பாம்பறியும் என்று
அதிபுத்திசாலியாய் பேசுபவரா நீங்கள்?
உங்களுக்கே இது வேடிக்கையாய் இல்லை.!

பாம்பின்காலை பாம்புதானறியும்!
அதுதானே இயற்கை‡அதனிடமிருந்து
இங்குநாம் கற்க வேண்டியதோ...
தன்னைத்தானே உணரவேண்டும்
இதைப்பற்றி எதுவுமே தெரியாமல்
முழங்காலுக்கும் மொட்டைக்கும்
முடிச்சுப் போடலாமோ!!!

எல்லாம் தெரிந்தவாறு பேசுவதும்
எல்லாம் தெரியாது பேசுவதும்
தெரிந்தும் தெரியாமலும் பேசுவதும்
யாருக்கும் தெரியாதென பேசுவதும்
யாரை யார் ஏமாற்ற...?‡முதலில்
நீ ஏமாறாமல் இருந்தால் தான்
அடுத்தவர்களிடம் ஏமாறாமல் இருப்பாய்!
நான் யாரிடம் ஏமாறுவேன் என்கிறாயா..?
ஹி...ஹி...வேறு யாரிடம்..?
சாட்சாத் உன்னிடமே தான்...!-ஆம்
உன் மனம் எனும் பொல்லாக் குரங்கிடம்..!

மனமென்ற ஒன்றுண்டாமோ?
அது அறிவைக் கெடுத்திடுமோ?
மனம் என்ன செய்யும்? தெரியுமா?
அது ஒன்றும் செய்யாது?
நீதான் அதை குரங்காக்குகிறாய்.
ஆம், இல்லாத ஒன்றை இருப்பதாக
கற்பனை செய்வதுதானே நம்மவர் இயல்பு!
மனம் என்பது யாவரும் செய்யும் கற்பனையே!

இல்லை என்பதை உண்டென்றும்
உண்டென்பதை இல்லையயன்றும்
இன்னும் எத்தனை நாள்தான் சொல்வீரோ?
பணம், பட்டம், பதவி எல்லாம்தான்
பெரிதென்றால், சாகும் நேரம்
ஏன் உயிர் பெரிதாகத் தெரிகிறது?
அப்படியயன்றால், உயிர்தானே பெரிது?!
இப்போது வாருங்கள் வழிக்கு!
அந்த உயிர்தானே எல்லோரிடமும் உள்ளது?
பிறகு ஏன் இந்த தேவையில்லா பேதைமை?!

இதையயல்லாம் தெரிந்தாலன்றோ
பாம்பின்கால் பாம்பறியும்?!
இல்லாதுபோய் நீங்கள் பேசுவது
உங்களுக்கே வேடிக்கையாயில்லை?!

-பாரதிசங்கர்

0 Responses to “பாம்பின்கால் பாம்பறியுமோ?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby