Sunday, January 13, 2013

பொங்கல் வாழ்த்து


கதிரவன் கதிர்களை பரப்புகையில்
இயற்கையின் படையல்கள் வணக்கம் சொல்லும்!
பானையில் பொங்கல் பொங்கும் வேளை
பூவையர் குலவைகள் வந்தனம் சொல்லும்!

சிறார்கள் விண்ணில் பட்டம் விடுகையில்
ஆகாய சந்தோசம் கண்ணில் தெரியும்
சீறிடும் காளைகள் மண்ணில் மோத
வீறிடும் தமிழர்கள் மறத்தைக் காட்ட..!

இதுதான் வீரம்! இதுதான் ஒற்றுமை!
என்றே என்றும் சேதி முழங்க...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்...

பாரதிசங்கர்.
முக்காணி.

0 Responses to “பொங்கல் வாழ்த்து”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby