Saturday, December 1, 2012

விரும்புவேன்...விரும்புவேன்



நறுமுகையின் குறுமுகையை
நிரம்பவே விரும்புவேன்

நானுமிதை நாணும் விதம்
குறும்புடன் விரும்புவேன்



மலர்கள் கொய்து தலையில் சூட
மகிழ்வுடன் விரும்புவேன்

காற்றை அணைத்து கவிதைபாட
சிலிர்ப்புடன் விரும்புவேன்

மனதை அள்ளி கொள்ளை கொள்ள
அருவியை விரும்புவேன்

பாட்டை கேட்டு ஆட்டம் போட
மயிலையே விரும்புவேன்

பாட்டைக் கேட்டு கானம்பாட
குயிலையே விரும்புவேன்

சறுக்கிவிழும் சிறுவர் ஓட்டம்
குழந்தையாய் விரும்புவேன்

ஆற்றில் விழுந்து சேற்றை அள்ளி
விளையாடவே விரும்புவேன்

கனவுப்பூக்கள் கையில் அள்ள
சந்தோ­மாய் விரும்புவேன்

முதியோர்க்கெல்லாம் வீடுகொடுத்து
வாழ்த்தவே விரும்புவேன்

பள்ளிக்கெல்லாம் பாடம் சொல்லி
கற்பிக்கவே விரும்புவேன்

மனதை அள்ளும் மேகக்கூட்டம்
மழைதர விரும்புவேன்

உலகுக்கெல்லாம் நீதிசொல்லும்
தகுதிபெற விரும்புவேன்

என்றும் உங்களை விரும்பும்


- பாரதிசங்கர்
முக்காணி.





0 Responses to “விரும்புவேன்...விரும்புவேன்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby