Saturday, November 24, 2012

கவிபாடும் கண்கள்

சிறகடிக்கும் சில நேரங்களில்
மலையில் இருந்து இறங்கும்
மழைபோல
அருவியாய் விழுந்து
அலையாய் எழுந்து துள்ளும்.





பரிகாச பரிசாக
பார்வைக்குள் பாவையாய்
களவாடும் கலையாட
திரவியம் திறந்தது.


பாலைவனம் ஏங்கும் ஊற்றுபோல
பாசத்திற்கு ஏங்கும்
மழலைகள்.

கறைபடியா கரையோரம்
கலகம் அல்ல...என்றால்
என்ன களங்கமா?
அலைகள் சொல்லித்
தெரியவேண்டியதில்லை என்றால்
அலையாய் மனம் அலைவதேனோ?

காண்பதெல்லாம் கண்கூடா
கபடான நாடகமா?
வேலியே பயிரை மேயுமா
விடியலே இருட்டைத் தேடுமா?

எல்லாம் காகிதங்களில்
ஓடங்கள்தான்
சிறகடிக்கும் சிட்டுக்குருவிகூட
ஒரு நொடியில்
சிலிர்த்து எழும்.
அதையும் கூட விட
மனமில்லா மானமில்லா செல்போன்கள்
காகிதங்களால் வந்த கடிதங்கள்
கேட்கட்டும்.
எங்களுக்கு பதில் என்ன?என்று.
எல்லாம் காகித ஓடங்கள் தானா?
-பாரதிசங்கர்
முக்காணி.

0 Responses to “கவிபாடும் கண்கள்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby