Monday, November 7, 2011

திரையுலகில் நீ ஒரு சகாப்தம்


பன்மொழி வித்தகர், புதுமைப்பித்தன்
நடனத்தில் மன்னன், நடிப்பில் கலைஞன்
கவிதை என்றால் கவிஞன்
திரைக்கதை என்றால் எழுத்தாளன்
இயற்கையில் நீ ஒரு இயக்குனர்
மொத்தத்தில் நீ ஒரு சகலகலாவல்லவன்!


நடிக்கத் தெரியாத பாத்திரத்திலும்
வெளுத்துக் கட்டுவதில்
அசகாய சூரன் நீ
நீ திரையில் வலம்வந்தால் போதும்
விகாரத் தோற்றங்களும் வசீகரமாகும்!

உன் வசமாகும் கலைத்தாயும்
உன்னைவிட்டுப் பிரிய மறுப்பாள்
கவிதைகளை கட்டிப்பிடிப்பாய்
திரைக்கதையை சிற்பமாய் செதுக்குவாய்
புன்னகையை கண்களில் சிந்துவாய்
கண்களிலே கவிதை வடிப்பாய்!

ஐம்புலன்களை ஆட்டுவிக்கும்
பஞ்சதந்திரம் செய்வாய்
கதைகளைத் தேடிச்சென்று
அதை காவியமாக்குவாய்
புதுமைகளைக் கண்டுபிடித்து
அதற்கு பெருமை சேர்ப்பாய்
அறிவியலையும் அலற விடுவாய்!

திரையுலகில் வரும் புதியவர்களுக்கு
ஆத்திச்சூடியை கற்றுக் கொடுப்பாய்
அவ்வை சண்முகியாகவும் வருவாய்
சப்பாணியாகவும் வருவாய்
இந்தியன் தாத்தாவாகவும் வந்து
இளைஞர்களைக் கவர்வாய்!

உனக்கு நடிக்கவே தெரியாது. ஆம்
சுத்தமாக நடிக்க மாட்டேன் என்று
நடிக்க தெரியாது.
உனக்கு பேசவே தெரியாது. ஆனாலும்
உடல் முழுவதும் பேச வைப்பாய்!

உன்னிடம் வந்து அடைக்கலமானதால்தான்
விருதுகளுக்கே பெருமை கிடைத்தது.
கனவுகளை கண்களில் காட்டாமல்
நிஜமாக்கும் விந்தைகள் செய்வாய்
தமிழ் மொழியில் நீ ஒரு சாணக்கியன்
கலையுலகில் நீ ஒரு விசுவரூபம்!
-பாரதிசங்கர்,
முக்காணி.

0 Responses to “திரையுலகில் நீ ஒரு சகாப்தம்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby