Monday, October 24, 2011

தித்திக்கும் தீபாவளி

தீமையைத் தகர்த்து
நன்மையைப் பெருக்கிட
எளிமையை போக்கி
ஏற்றங்கள் தந்திட!


தீபங்களே வரிசையாய்
வந்து நன்மைகள் வழங்கிட
முத்தாய்ப்பாய் புன்னகை
முகங்களில் தவழ்ந்திட!

தங்கமாய் மின்னிடும்
பட்டாசுச் சிதறல்கள்
வெள்ளொளியாய் சிதறும்
கம்பி மத்தாப்பூக்கள்!

உள்ளத்தில் ஆனந்தம்
நிலையாய் வந்திடும்
தினம் தேடிய பாதைகள்
தோள்களில் சாய்ந்திடும்!

கவலைகள் மறைய
கனவுகள் கலைய
காரிருள் நீங்க
உறவுகள் அழைக்க!

சின்ன சின்ன ஆசைகள்
கண்ணில் வந்து உலாவுதே
வண்ண வண்ண பாடல்கள்
மனதில் தாளம் போடுதே!

மறைந்து வரும் மனிதநேயம்
தீபத்திருநாளில் மீண்டும் மலரட்டும்
கலைந்து செல்லும் கனவுகள்
யாவும் புதிதாய் பூக்கட்டும்!

பாரதி சங்கர், முக்காணி.
===

0 Responses to “தித்திக்கும் தீபாவளி”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby