Sunday, June 26, 2011

தமிழுக்கும் அமுதென்று பேர்..!

இந்த வரிக்கு சொந்தக்காரர், பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் உண்மையிலேயே அமுதுதான். தமிழின்  சுவையை உணர்ந்தவர்கள் அமிர்தத்தையே பருகியதற்கு சமம். எப்படி என்று தெரியாமல் இரு ப்பவர்களுக்கு தாயின் பெருமை தெரியாத மகனைப் போல திக்கு தெரியாதவர்களாக வாழ்வின் அரு மையை உணராது பிறந்தோம், இருந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று தேமே என்று வாழ்க்கையை  முடித்துக் கொள்கிறார்கள். தாயின் பெருமையை உணர்ந்தவர்கள் வாழ்க்கையில் ஒளிவீச வெற்றி  நடைபோடுகிறார்கள். தமிழின் சுவையும், தாயின் பெருமையைப் போன்றதுதான். அதுவே நம்  தாய்மொழியாகி விட்டதால், அதை விட நாம் வேறெந்த பிறவிப்பயனையும் பெற வேண்டிய தேவையில் லை. காரணம், நமக்கு பிறவியின் உண்மையையும், வாழ்விற்கான அர்த்தத்தையும் கற்று தருகிறது, நம்  தாய்மொழி. எப்படி என்று பார்ப்போம் நாம்..!

உயிராகி, மெய்யாகி, ஆயுதமாகி நிற்கிறது தமிழ்..!
தமிழ் மொழியின் தொன்மை அளவிடற்கரியது. இந்த மொழியில் இருந்துதான் உலக மொழிகள் தோன் றின. பழமையான பிராமி எழுத்துக்களாலும், வட்டெழுத்து, சங்கிலி எழுத்துக்களாகவும் எழுதி வரப்பட் டது. இப்போது தமிழ் விஞ்ஞானபூர்வமாகவும், உச்சரிப்பு  ரீதியாகவும், வாய்மொழி உத்தரவுகளை புரிந்து  கொள்ளும் விதமாகவும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் என்பது சித்தர்களின் சர நூல். சாத்திர ரீதியாகவும், தமிழ் எழுத்துக்கள் இத்தனை தான்  இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும், வலது நாசியில் ஓடிக் கொண்டிருக்கும்  சூரியக்கலையைக் குறிக்கும்.  அதாவது, அந்த சூரியக்கலை 12 அங்குலம் ஓடுவதை 12 உயிரெழுத்துக்களாக்கி இருக்கிறார்கள். நெடில்  எழுத்து ஏழும், உடலில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிக்கின்றன. இதைக் குறிக்கவே, திருக்குறளில் ஏழு  சீர்களை வைத்துள்ளார், திருவள்ளுவர். மேலும் 133 அதிகாரங்களையும் வைத்துள்ளார்.
அதாவது, 1+3+3=7.

குறில் எழுத்து ஐந்தும், ஐந்து பூதங்களையும், பொறிகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள், ஐந்து புலன்களையும்  குறிக்கும். நெடில் எழுத்துக்கள் ஏழும், குறில் எழுத்துக்கள் ஐந்தும் வைத்ததன் மற்றொரு காரணம்  மனிதன் நீண்ட ஆயுள், புகழ், ஞானம் பெற வேண்டும் என்பதற்காகத்தான். அதனால்தான், குறிலை கு றைவாகவும், நெடிலை அதிகமாகவும் வைத்தார்கள்.

 மெய்யெழுத்துக்கள் 18 வைத்ததன் காரணம், இடது நாசியில் சந்திர கலை 16 அங்குலம் ஓடுகிறது. அத் துடன் மனம், உயிர் இரண்டும் சேர்ந்து 18 மெய்யெழுத்துக்களாக வைத்துள்ளார்கள்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையான 24 நிமிடத்திற்கு 360 மூச்சு (இதை வைத்தே வட்டத்துக்கு  360 பாகைகள் வைக்கப்பட்டது.) ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓ டுகிறது. இந்த 21,600 மூச்சுகளைக் குறிக்கவே 216 உயிர் மெய் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன.

 இப்படி மூச்சை 21,600 வீதம் செலவு செய்தால் ஆயுள் 120 வருடம். மூச்சு கூடினால் ஆயுள் குறையும்.  மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல், பேசும் ஒரே மொழி உலகிலேயே தமிழ் மொழி மட்டும்தான்.
மேலும், தனிநிலை என்பதான ஆயுத எழுத்தை முக்கண் முதல்வனான பரமசிவனுக்கு இணையாக வை த்தார்கள்.

தமிழ் என்ற சொல்லே ஒரு வல்லெழுத்து. (த), மெல்லெழுத்து (மி), ஒரு இடையிலான எழுத்து (ழ்)  எனக்கோர்த்து உருவாக்கப்பட்டது.
இப்படி தமிழ் மொழி எழுத்துக்கள் பல காரணங்களை வைத்து எழுத்தாக்கம் செய்துள்ளார்கள்.

உலகில் இயற்கையோடு இயைந்த மொழி நம் தமிழ்மொழி மட்டுமே.

0 Responses to “தமிழுக்கும் அமுதென்று பேர்..!”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby