Wednesday, May 11, 2011

வெயிலை சமாளிக்க...

உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாய்ங்களான்னு தமிழ்சினிமாவில் ஒரு பாடலில் வெயிலின் கொடுமையைப் பற்றியும், கதாநாயகியின் அழகைப் பற்றியும் வர்ணித்து இருப்பார்கள். அப்படிப்பட்ட வெயில் உங்களையும் வாட்டி வதைக்கிறதா? இதோ...உங்களுக்கான டிப்ஸ்...


நம் உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல். தலை முதல் கால் வரை போர்வை போல் சுற்றியுள்ள இந்த தோல் 2 சதுரமீட்டர் பரப்பளவை உடையது. மென்மையானது. மனிதனின் முதல் அடையாளம் தோல்தான். கோடையில் ஏராளமான சருமநோய்கள் வரக்கூடும் என்பதால், கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்.

சிலருக்கு வீட்டை விட்டு வெளியே வெயிலில் போய்விட்டு வந்தால், உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாகவும், கொப்புளங்களாகவும் வந்துவிடும். இதுதான் போட்டோ அலர்ஜி எனப்படும் சூரிய ஒளி ஒவ்வாமை. இன்னும் ஒரு சிலருக்கு உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சருமம் வறண்டு மயக்கம் அடையும் நிலை ஏற்படும். வியர்க்குரு, வேனற்கட்டி போன்றவை குழந்தைகளுக்கு உண்டாகும்.

உடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். கோடைகாலத்தில் தான் உடலில் அதிகமாக வியர்வை உண்டாகும். அப்போது செயற்கை இழையால் ஆன உடைகளை அணியும்போது சருமத்தில் இருந்து உண்டாகும் வியர்வை வெளியேற வழியில்லாமல், உடல் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். அந்த வியர்வைக்கழிவுடன், வெளியில் இருந்து வரும் தூசி, துகள்கள் சேர்ந்து சருமத்தில் பாதிப்புகளை உண்டாக்கி விடும். இதனால் தான் படர்தாமரை போன்ற நோய்கள் உண்டாகின்றன.

கோடைகாலத்தில் பெரும்பாலானவர்களைத் தாக்கும் மற்றொரு நோய், சின்னம்மை. வேரிசெல்லா ஜோஸ்டர் என்னும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் சின்னம்மை வருகிறது.

சமாளிப்பது எப்படி?
* தூய பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். தூய வெண்ணிற பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
* காரம் குறைந்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.
* தினமும் காலை வேளையில் இரண்டு கப் தண்ணீரும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு கப் தண்ணீரும் அருந்துவது நல்லது.
* தினமும் காலையில் உணவுடன் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க வேண்டும்.
* நீர்ச்சத்து மிகுந்த தர்பூசணி, அன்னாசி, திராட்சை, ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்கள் சருமத்திற்கு நன்மை தரும் சத்துக்களை கொண்டவை. உடலில் ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்க பழச்சாறுகளே சிறந்த மருந்து.
* ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சியும், ஆன்டி ஆக்சிடெண்களும் அதிகம் உள்ளன.
* அன்னாசி பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது. செரிமானத்திற்கு உகந்தது.
* பிராடு ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் லோஷன்கள் வெயிலின் கொடுமையில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். முகமே வறண்டு போயிருந்தால் அகம் எப்படி மலரும். அகம் மலர முகம் மலர வெயிலை கூலாக்கும் மேற்கண்ட ஐடியாக்களை கடைபிடிப்பீர்களாக..!

0 Responses to “வெயிலை சமாளிக்க...”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby