Saturday, April 30, 2011
அழகு, ஆரோக்கியம்...
Do you like this story?
அழகுக்கு சில வைட்டமின் ஏ, சி, இ
வைட்டமின் ஏ
காணப்படும் உணவுப்பொருட்கள்: கேரட், மாம்பழம்
முருங்கைக்கீரை, முள்ளங்கி, வெந்தயம், பப்பாளி, ஆரஞ்சு, கறிவேப்பிலை, கொத்துமல்லி. பலன்கள்: இவற்றில் உள்ள பீட்டா கரோட்டின்கள் தோல் உலர்ந்து போகாமல் இருக்கச் செய்கிறது.
தடுக்கும் நோய்கள்: மாரடைப்பு, சிறுநீரகக் கல்
வைட்டமின் இ
காணப்படும் உணவுப்பொருட்கள்: ரைஸ் பிராண்ட் ஆயில், பருத்தி விதை எண்ணை, நல்லெண்ணை, பசுங்கீரை, சோளம்.
தடுக்கும் நோய்கள்: ஆண்மைக்குறைவு மற்றும் மலட்டுத்தன்மையை நீக்குகிறது.
வைட்டமின் சி காணப்படும் உணவுப்பொருட்கள்: நெல்லிக்கனி, முட்டைக்கோஸ், முருங்கைக்கீரை, கொத்துமல்லிக்கீரை.
பலன்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. முதுமையைப் போக்கும் மருந்து நெல்லிக்கனி.
அழகு...
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்Õ என்பார்கள். அப்படிப்பட்ட முகத்தை நாம் பராமரிக்க வேண்டாமா? அதற்கு என்ன செய்வது என்கிறீர்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்...
முகத்தில் உள்ள எண்ணை பிசுக்கு போக வேண்டுமா? முகத்தில் சுருக்கங்களா?
கவலையே வேண்டாம்...
சீரகத் தண்ணீர் அருந்தலாம். பால் வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பழங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாலிபீனால்கள் நிறைந்த பப்பாளி, கேரட், தக்காளி ஜூஸ் ஆகியவை முகப்பொலிவிற்கு சிறந்தவை. இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் தன்மையால் முகத்தில் சுருக்கங்கள் விழாது.
முகப்பருக்களைப் போக்க வெள்ளைப்பூசணிக்காய், பாசிப்பயறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடுங்கள்.
முக அழகுக்கு பேஸ்ட் ரெடி!
ஆவாரம்பூ, ரோஜா இதழ் இரண்டையும் சமபங்கு எடுத்து அத்துடன் இருமடங்கு முல்தானிமட்டி கலந்து மாவாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையை பன்னீரில் குழைத்து வாரம் 3 நாள் முகப்பூச்சாகப் போடவும். அரை மணி நேரம் கழித்து கழுவ பளிச் முகமாகி விடும். செல்லில் உள்ள ஆக்சிஜன் அணுக்கள் இறப்பதால்தான் தோல் சுருக்கம் உண்டாகிறது. இதை காய்கறிகளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட் தடுக்கிறது.
உணவே மருந்து. மருந்தே உணவு என்கிற எளிய சித்தாந்தத்தின் அடிப்படையில், இயற்கை நமக்களித்த அருட்கொடைதான் இயற்கை உணவுகள்.
இவை நம் பசியை போக்குவது மட்டுமின்றி, உடலில் உள்ள நோய்க்கிருமிகளையும் அழித்து விடும் ஆற்றல் படைத்தது. அப்படிபட்ட உணவுகள் எவையென்று பார்ப்போம். இவற்றில், இலைவகையான உணவுகளைத் தான் கீரைகள் என்று அழைக்கிறோம். அவை பற்றிய அரிய செய்திகள் உங்களுக்காக...
கீரைகள்
முருங்கைக்கீரை: இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்று மந்தம், உடல் சூடு நீங்கும். பித்தம் தணியும். கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலி குணமாகும். தாய்ப்பால் சுரப்புக்கு அருமருந்து. முருங்கை விதை விந்துவைக் கெட்டிப்படுத்தும்.
பொன்னாங்கண்ணி: புரதம், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது. மேனியின் அழகு பொலிவாகும். சொறி, சிரங்குகள் குணமாகும். கண் எரிச்சல், உடல் உஷ்ணம் நீங்கும். மாலைக்கண் நோயாளிகளுக்கு நல்லது. மூலநோய், மண்ணீரல் பாதிப்புகளை போக்கும்.
வல்லாரை: வல்லாரையைத் தின்றால், எல்லாரையும் வெல்லலாம் என்பது பழமொழி. உடல் வலுவாகும். நினைவாற்றலை வளர்க்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். யானைக்கால் நோயைப் போக்கும். காக்காய் வலிப்பு தீரும். மூளை பலப்படும். மலச்சிக்கலுக்கு மாமருந்து.
தூதுவளை: தூதுவளை, மாதுளை இருக்கும் வீட்டில் மார்பிலும், வயிற்றிலும் களங்கமில்லை என்பார்கள். தூதுவளையைப் பொடியாகவோ, கீரையாகவோ சாப்பிட்டு வந்தால், சளி, காய்ச்சல், இருமல், இரைப்பு, ஜலதோஷம் நீங்கும். ஆஸ்துமா, ரத்தசோகை, தைராய்டு, நுரையீரல் நோய்கள் குணமாகும். மூளை நரம்புகள் வலுப்பெறும். நினைவாற்றல் பெருகும். புற்றுநோய் வராது. மூலநோய் தணியும்.
பசலிக்கீரை: சுண்ணாம்பு, இரும்பு, வைட்டமின், நார்ச்சத்து செறிந்தது. நரம்பு வியாதி தீரும். பார்வைக் குறைபாடு நீங்கும். மலச்சிக்கலுக்கு நல்லது. கொழுப்பைக் கரைக்கும். ரத்தத்தில் சிவப்பணுக்களை விருத்தி செய்யும்.
முட்டைக்கோசு: மாரடைப்பைத் தடுக்கும். மார்பகப் புற்றுநோயைத் தீர்க்கும். சருமம் மினுமினுக்கும்.
அகத்திக்கீரை: அஜீரணக்கோளாறை சரிசெய்யும். செரிமானத்தை சீராக்கும். மலச்சிக்கலுக்கு மாமருந்து.
முளைக்கீரை: வயதானவர்களும், நடுத்தர வயதினரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய கீரை இது. ரத்த அழுத்த நோய்க்கு நல்லது. நல்ல பசி எடுக்கும். காசநோயால் வரும் காய்ச்சல் குணமாகும்.
அரைக்கீரை: புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்தது. உடலுக்கும் குளிர்ச்சி, வலிமை தரக்கூடியது. தாது பலம் பெருக்கும். காய்ச்சல், ஜன்னி, கபம், பித்தம், வாய்வுக் கோளாறுகளை நீக்கும். ரத்த விருத்திக்கு உதவும். பெண்களின் மேனி எழிலுக்கு மிகச் சிறந்த வரப்பிரசாதம்.
சிறுகீரை: நீரிழிவு நோய்க்கு நல்லது. உடல் உஷ்ணம் பெருக்கும். நஞ்சு முறிக்கும் தன்மை உடையது. உடம்பின், அழகு மெருகேறும். வாதம், காசநோய், நீர்க்கடுப்பு, வீக்கம் நீக்கும். சிறுநீரக குறைபாடுக்கு கண்கண்ட மருந்து.
வெந்தயக்கீரை: வாய்ப்புண், வயிற்றுப் புண்ணுக்கு உடனடி நிவாரண மருந்து.
கறிவேப்பிலை: மூளை, கண், தோல், கருப்பை, நரம்பு மண்டலங்களின் செயல்திறனை ஊக்குவிக்கும். கருப்பை வெப்பத்தை தணிக்கும். உடல் சூட்டை போக்கும்.
மணத்தக்காளி: வாய்ப்புண், வயிற்றுப்புண் உருவாகாமல் உடல் சூட்டைத் தணிக்கும். வயிற்றில் பூச்சி உருவாகாமல் தடுக்கும். உள்ளுறுப்புகளை பலப்படுத்தும். சிறுநீரக உபாதைக்கு அருமருந்து.
மஞ்சள் கரிசலாங்கண்ணி: குரலறுப்பு நோய், காமாலை, வீக்கம், பல்நோயை போக்கும். மேனி பொலிவு பெறும். உடலுக்கு பலம் தரும். ரத்தசோகை நீங்கும். கல்லீரல் பலப்படும். ரத்தநாள அடைப்பு விலகும். நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, இருமல், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்மருந்து.
புளிச்சக்கீரை: நுரையீரலை வலுப்படுத்தி சுவாசத்தை சீர்செய்யும். தேகத்துக்கு வலு தரும். போகத்தில் நாட்டம் உண்டாக்கும். தீராத பித்தத்தை போக்கும். ரத்த பேதியை சரிசெய்யும். மார்பக புற்றுநோயை தடுக்கும்.
பிரண்டை: ரத்த மூலத்திற்கு அருமருந்து. மாதவிடாய் கோளாறுகள் அகற்றும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கும்.
நொச்சி: தொக்குக்கு மிஞ்சிய தொடுகறி இல்லை. நொச்சிக்கு மிஞ்சிய மருந்து இல்லை என்பார்கள். நொச்சியை ருசித்து தின்றால், தீராத வலியும் தீரும். பித்தம், வாய்வுக்கோளாறு உள்ளிட்ட சகலபிணிகளும் நீங்கும்.
கொத்தமல்லிக்கீரை: தோலை மிருதுவாக்கும். வயிற்றுவலி, பொருமலுக்கு சிறந்த மருந்து. உடல் இளைப்பு, காசநோய், காதுமந்தம் ஆகிய நோய்களைப் போக்கும்.
புதினா: அஜீரணம் அகலும். வயிற்றுப்போக்கு, குடல் பிணிகள் நீங்கும். சீதபேதிக்கு அருமருந்து. மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். பித்தம் அகலும். ரத்தம் சுததமாகும். ரத்தக் குழாய்கள் பலப்படும். சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் நிவர்த்தியாகும். கீல்வாத நோய்கள் கட்டுப்படும். கண்நோய்கள் நீங்கும். தலைவலி, நரம்புவலி போக்கும். வெள்ளைப்படுதல் தடுக்கும். பல் நோய்கள் நீங்கும். கர்ப்பகால வாந்திக்கு சிறந்த நிவாரணி.
காசினி: உடல் சூட்டை தணிக்கும். உடல் எடை குறையும். சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து. பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிகப்படியான உதிரப்போக்குக்கு உகந்த மருந்து. ஆறாத புண்களும் குணமாகும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். தாதுவை விருத்தி செய்யும்.
முள்ளங்கி கீரை: இரைப்பை கோளாறு, சிறுநீரக நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள்காமாலை நீரிழிவு, மலச்சிக்கல், கல்லீரல் கோளாறுக்கு அருமருந்து. இதயத்தை பலப்படுத்தும். கண்பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறை நிவர்த்தியாகும். கரப்பான் தோல்வியாதி நீங்கும். செரிமானம் அதிகரிக்கும். சூட்டுவலி தீரும்.
முசுமுசுக்கை: நுரையீரல், புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு, விந்து உற்பத்தியின்மை, மலச்சிக்கல், பாலுண்ணிக்கு கைகண்ட மருந்து.

Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “அழகு, ஆரோக்கியம்...”
Post a Comment