Sunday, April 24, 2011

கண்கள் சொல்லும் ரகசியம்

ஒரு ஆண் பெண்ணைப் பார்த்தவுடன் தன் காதலைச் சொல்ல வேண்டுமானால் கண்களைத்  தான் முதலில் தூது அனுப்புவான். அதேபோல் தான் பெண்களும்...எப்படி என்கிறீர்களா?



வாய், பேசும் ஆயிரம் மொழிகளைவிட கணக்கில் அடங்கா பேசாமொழிகளைக் கண்கள்  பேசிவிடும்.
கண்கள் பேசும் மொழிகளுக்கான அர்த்தம் ஆழமானது.

காதலைச் சொல்ல கண்ணடிப்பது ஒரு வழக்கம் என்று அனைவரும் சொல்வதுண்டு. அப்படி  கண்ணடித்துக் காதல் பேசுவதிலும் பலவிதங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சியை  மேற்கொண்டுள்ளது, அமெரிக்க இணையதளம். அந்த ஆராய்ச்சியில் வெளிவந்துள்ள சில  சுவாரசியமான தகவல்கள் தான் இவை. அவற்றில் உங்கள் பார்வைக்கு சில.

வலது பக்கக் கண்ணடிச்சா, சந்தோஷப்படுங்கள். இதற்கு ஐ லவ் யூ என்று அர்த்தமாம்.
அதே இடது பக்கக் கண் என்றால், மனதைக் கொஞ்சம் தேற்றிக் கொள். உன்னை எனக்குப்  பிடிக்கவில்லை என்று அர்த்தமாம்.

இரண்டு கண்களையும் திறந்து மூடினா, நீங்க சொல்றதுக்கு சரின்னு அர்த்தம். ஆனால்,  அதே மாதிரி இரண்டு மூன்று தடவைகள் செய்தால், நம்மை யாரோ பார்க்கிறார்கள் என்று  அர்த்தம்.
வலது கண்ணை இரண்டு தடவை அடித்தால், எனக்கு ஆள் இருக்கு. நீ வேற இடம் பார்த் துக்கொள் என்று சொல்றாங்களாம்.

இப்பத் தான் ஒரு சுவாரசியமான சிக்னல், கண்ணிமைகளை தாழ்த்தி சின்ன கேப்ல பார்த் தால், சீக்கிரம் கிஸ் பண்ணுங்கன்னு அர்த்தமாம்.
வேகமாக கண்ணடிக்காமல் வலது கண்ணை மெதுவாக மூடினாங்கன்னா, சந்தோஷப்படுங்க  என்று அர்த்தம். நீங்க ஸ்மார்ட்டா இருக்கிறீங்கன்னு அர்த்தம். அதே மாதிரி இடது கண் ணை மூடினால், கொஞ்சம் ஜாக்கிரதை. என்னைப் புரிந்துக் கொள்ளுங்கன்னு சொல்றாங்க ளாம்.

இதைப் படிச்சிட்டு, வில்லங்கமானால், அதுக்கு நாங்க பொறுப்பில்லை.

0 Responses to “கண்கள் சொல்லும் ரகசியம்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby