Thursday, March 3, 2011

வெள்ளைப் பொழுதுகள்

காலை எழுந்ததும் பல்துலக்கி
ஆப்பங்காரி வீட்டுக்குச் செல்வேன்
அங்கு சென்று பார்த்தால்
நமக்கு முன் ஐந்தாறு பேர்
சப்புக்கொட்டிக்கொண்டு காத்து இருப்பர்.


சூடான ஆப்பம் இரண்டு வாங்க
கால்கடுக்க காத்து நிற்பேன்
அப்பாட ஒருவழியாக
அடுத்து நமக்குத்தான் ஆப்பம்
என்று இருக்கும் வேளையில்
வருவார் வி.ஐ.பி. மெதுவாக

அடடா இப்போதும் நமக்கு கிடையாதா
என்று ஏங்கும் மனம்
கண்ணீர் வராத சிறு அழுகையுடன்!
அடுத்து உனக்குத்தாம்பா
என்ற ஆப்பங்காரியின் சமாதானம்

எனக்கு சம்மதமாக இருக்கும்வேளை
வருவார் அண்ணனைப் போல!
தயாராக சூடாக இருந்த ஆப்பம்
பறந்தது அவர் கைகளுக்கு!

காரணம் கேட்டால், அவன் அப்பவே
வந்தவன்பா என்பார் பரிகாசமாய்
ஆப்பங்காரி...! வேறு என்ன செய்வது
கையை பிசைந்து கொண்டே நிற்பேன்
ஆப்பம் எப்போது சாப்பிடப்போறோம் என்று!
தவிக்கும் நாவில் எச்சில் ஊறுவதுதான் மிச்சம்

அடடா கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டவில்லையே
என்பது இதுதானோ...?
பள்ளிக்கு வேறு நாழிகை ஆச்சே
ஆச்சி சீக்கிரமா ஆப்பம் கொடுங்க
என்பேன் கெஞ்சலாய்..கொஞ்சம் கொஞ்சலாய்!

இந்தாப்பா எடுத்துட்டு ஓடு
என்பாள் ஆப்பங்காரி அன்பான அதட்டலுடன்
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூரு போல வருமா
என்ற முணுமுணுப்புடன்
பாடிக்கொண்டே ஓடுவேன் பள்ளிக்கு!

ஆப்பம் வாய்க்குள் போனது தெரியாது
அவ்வளவு ருசி..!
அது ஒரு வெள்ளைப் பொழுது
இளமையின் சிறகுகள் முளைத்த நேரம்.

பம்பரம், கில்லி, கோலி, பந்து என்று
காலங்களுக்கேற்ற விளையாட்டு
மனதில் பறக்கும் ரெக்கைக்கட்டி சந்தோஷம்
விளையும் பயிர் முளையிலே தெரிந்தது
இப்போது பயிர் வளர்ந்து மரமானதும்
உறுதியாய்..!

-பாரதிசங்கர்

0 Responses to “வெள்ளைப் பொழுதுகள்”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby