Wednesday, February 16, 2011

முத்தே முத்தம்மா...


முத்தம் மனிதனுக்கு மட்டுமல்லாமல்  சில உயிரினங்கள் மத்தியிலும்  இருக்கிறது. ஆனாலும், முத்தத்தை  பரவசத்தோடு அனுபவித்து இன்பம்  அடைவது மனிதன் மட்டுமே.  இப்படி மனிதனை இன்ப உலகுக்கு  அழைத்துப் போகும் முத்தத்தைப்  பற்றி
பலவிதமான ஆராய்ச்சிகள்  தொடர்ந்து நடந்து கொண்டே  இருக்கின்றன. ஒவ்வொரு  ஆராய்ச்சியும் முத்தத்தால்  கிடைக்கும் நன்மைகளை பெரிய  பட்டியலே போட்டுக்  கொடுக்கின்றன.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த முத்த  ஆராய்ச்சியாளர்கள்  முத்தமிட்டுக்கொண்டே ஒரு  ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த  ஆய்வில், ஆணும்,பெண்ணும்  இறுக்கமாக கட்டி அணைத்து  முத்தம் கொடுத்தால் மன  அழுத்தத்தை ஏற்படுத்தும்  கார்டிகோல் என்ற ஹார்மோன்  சுரப்பு குறைவதை  கண்டுபிடித்தார்கள். அதனால்  இறுக்கி அணைக்கும் ஆணும்,  பெண்ணும் சாமான்யமாக  டென்ஷன் ஆக மாட்டார்கள்.

அதேபோல் திருமணம்  ஆனவர்களும், திருமணம்  ஆகாதவர்களுக்கும் இடையே  டென்ஷன் எப்படி உள்ளது என்ற  கோணத்திலும் ஆராய்ந்தார்கள்.  அப்போது புதிதாக திருமணம்  செய்துகொண்ட வர்கள் டென்ஷன்  இல்லாமல் அதிக மகிழ்ச்சியுடன்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  எல்லாம் இறுக்கி கட்டிப்பிடித்து  முத்தமிடும் வைத்தியத்தின்  மகிமைதான். திருமணம் முடிந்து  பிள்ளைகள் பிறந்தபின் கணவன்,  மனைவி தங்களுக்குள்  முத்தமிடுவதையும், உடலுறவு  கொள்வதையும் குறைத்துக்  கொள்வதால் தான் மீண்டும்  அவர்கள் மன அழுத்தத்தை  சந்திக்கிறார்கள்.

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்,  முத்தத்திற்கு பெண்கள் தான் அதிக  முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  ஆண்கள் அவ்வளவாக அதிக  முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  சில ஆண்கள் முத்தமே  கொடுக்காமல் உடலுறவை முடித்துக்  கொள்கிறார்கள். ஆனால், பெண்கள்  முத்தத்திற்காக ஏங்குகிறார்கள் என்று  ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
முத்தம் கொடுக்கும்போது 66  சதவீதம் பேர் தங்களை அறியாமல்  கண்களை மூடிக் கொள்கிறார்கள்.  மீதமுள்ளவர்கள் தங்கள் துணையின்  முகத்தை பார்த்தபடியே  முத்தமிடுகிறார்கள். அமெரிக்க  பெண்கள் முத்தத்தில் கில்லாடிகள்.  அவர்கள் திருமணத்திற்கு முன்பு  குறைந்தபட்சம் 80  ஆண்களையாவது முத்தமிட்டு  விடுகிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரை காதல்  திருமணம் செய்து  கொண்டவர்களை காட்டிலும்,  பெரியவர்கள் பார்த்து முடிக்கும்  திருமணத்தில் இணைந்த  ஜோடிகளே அதிகமாக முத்தமிட்டுக்  கொள்கிறார்கள்.  முத்தமிடாதவர்களைக் காட்டிலும்  முத்தமிடுபவர்கள் 5 ஆண்டுகள்  கூடுதலாக உயிர்வாழ்கிறார்கள்.  அதனால், சந்தர்ப்பம் கிடைக்கும்  போதெல்லாம் முத்தமிடுங்கள்
 என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

முத்தமிடுவதால் ஏற்படும் நன்மைகள்  ஏராளம். முத்தம் கொடுக்க முகத்தில்  உள்ள 29 தசைகள் இயங்குகின்றன.  எவ்வளவு அதிகமாக முத்தம்  கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு  முதுமையில் முகத்தில் சுருக்கம்  ஏற்படுவது தள்ளிச் செல்கிறது.  முத்தமிடும்போது ஊறும் எச்சில்  கொழுப்பு, புரதம் மற்றும் சில  ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.  நோய் எதிர்ப்பு சக்தியையும்  கொடுக்கிறது.

ஒருமுறை முத்தமிடுவதால் 3  கலோரி சக்தி எரிக்கப்படுகிறது.  அதுவே பிரெஞ்ச் முத்தமாக  அதாவது உதட்டோடு உதடு  இணைத்து, நாவால் துளாவி, இறுக  அணைத்து முத்தமிட்டால் 5  கலோரி வரை சக்தி எரிக்கப்பட்டு  விடுகிறது. குண்டாக இருப்பவர்கள்  தொடர்ந்து ஒரு நிமிடம் வரை  முத்தமிட்டால் தங்கள் உடலில் 26  கலோரி சக்தியை குறைக்க முடியும்.  இதன் மூலம் அவர்கள்  அதிகப்படியான தொப்பையும்  குறையும். முத்தமிடும்போது நாம்  பெரும்பாலும் வலதுபுறமாகவே  முத்தமிடுகிறோம்.

மூளையில்  உணர்ச்சிகள் வலது பக்கம்  கட்டுப்படுவதே இதற்கு காரணம்.  முத்தத்தின் மூலம் எய்ட்ஸ் பரவாது.  சினிமாவில் முதல் முத்தக்காட்சி  1896&ல் இடம்பெற்றது. படத்தின்  பெரே தி கிஸ் தான். ஜான் சி.ரைஸ்  என்ற நடிகர் மே இர்வின் என்ற  நடிகைக்கு கொடுத்த முத்தம்தான்  திரையில் கொடுக்கப்பட்ட முதல்  முத்தம்.

0 Responses to “முத்தே முத்தம்மா...”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby