Saturday, February 12, 2011

கமலின் காதல் கவிதை

காதல் இல்லாமல் யாரும் கவிஞர்களாகி இருக்க முடியாது. அதற்கு கமலும்  விதிவிலக்கல்ல. அவர் காதலை எவ்வளவு ஆழமாக நேசித்திருக்கிறார் என்பதை  அவர் முத்துக்கள் போன்று கோர்த்திருக்கும் அழகிய இந்த காதல் வார்த்தைகளில்  பாருங்கள்.


நட்பிற்கும் காதலுக்கும் இடையே உள்ள மெல்லிய நூலிடை இடைவெளியை  எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் என்பதை படித்து அதன் சுவையை  உணருங்கள்.
இதோ அந்த காதல் காவிய பாடல் உங்களுக்காக...

பூகோளம் பூராவும்
புரிகின்ற மொழிதானே காதல்!
வேறேதும் நீ சொல்லாமல்
விழியாலே கதைபேசும் காதல்!

தனித்திருப்பவர் பரிதவித்திருப்பவர்
விழித்திருப்பினும் கனவுகள்
தனக்கென ஒரு உறுதுணைக்கொரு உயிர்
கிடைப்பதின் சுகம் உலகறியுமே!

சேதாரம் இல்லாமல்
செய்யும் புன் நகைப்பூட்டும் நட்பு
யாரோடு செய்தாலும் சேராத
சுகம் சேர்க்கும் நட்பு!
& மன்மதன்அம்பு படத்திற்காக கமல் எழுதிய காதல் பாடல் இது.

0 Responses to “கமலின் காதல் கவிதை”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby