Thursday, January 20, 2011
2011 உலக கோப்பை கிரிக்கெட் ஒரு கண்ணோட்டம்
Do you like this story?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பிப்ரவரி 19ந் தேதி முதல் ஏப்ரல் 2ந் தேதி வரை நடக்கிறது.
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றிய விவரத்தைப்
பார்ப்போம்.
இந்திய அணி
டோனி (கேப்டன்), ஷேவாக் (துணை கேப்டன்), தெண்டுல்கர், கவுதம் கம்பீர், விராட் கோக்லி, யுவராஜ்சிங், சுரேஷ்ரெய்னா, யூசுப் பதான், ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், நெஹ்ரா, பிரவீன்குமார், முனாப் பட்டேல், ஆர்.அஸ்வின், பியுஷ்சாவ்லா.
தமிழக வீரர் அஸ்வினுக்கு இடம்
தமிழக சுழற்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மேனுமான ஆர்.அஸ்வின் அணியில் இடம் பிடித்துள்ளார். 22 வயதான சுழற்பந்து வீச்சாளர் பியுஷ்சாவ்லா ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணியில் இடம் பெற்றுள்ளார். முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன்சிங் இருப்பார். 6 பேட்ஸ்மேன்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்கள், ஒரு ஆல்&ரவுண்டர் (யூசுப் பதான்), ஒரு விக்கெட் கீப்பர் (கேப்டன் டோனி) ஆகியோர் அணியில்
இடம் பெற்றுள்ளனர்.
இடம் பெறாதவர்கள்
சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, தமிழக பேட்ஸ்மேன் எம்.விஜய், ரவீந்திர ஜடேஜா, அமித்மிஸ்ரா, புஜரா, தினேஷ் கார்த்திக். விக்கெட் கீப்பர்கள் பார்த்தீவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், விரித்திமான் சஹா, இளம் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்.
இங்கிலாந்து அணி
ஸ்டிராஸ் (கேப்டன்), ஆண்டர்சன், இயான் பெல், பிரிஸ்னன், ஸ்டூவர்ட் பிராட், காலிங்வுட், மோர்கன், கெவின் பீட்டர்சன், மேத் பிரையர், அஜ்மல், ஷாஸத், ஸ்வான், ஜேம்ஸ் டிரிட்வெல், ஜோனதன் டிராட், லுக் ரைட், மைக்கேல் யார்டி.
நியூசிலாந்து அணி
டேனியல் வெட்டோரி (கேப்டன்), ஹாமிஸ் பென்னட், ஜேம்ஸ் பிராங்ளின், மார்ட்டின் கப்தில், ஜேமி ஹாவ், பிரன்டன் மெக்கல்லம், நாதன் மெக்கல்லம், மில்ஸ், ஜேக்கப் ஓரம், ஜெஸ்ஸி ரைடர், டிம் சவுதி, ஸ்காட் ஸ்டைரிஸ், ராஸ் டெய்லர், கனே வில்லியம்சன், லுக் உட்காக்.
வங்காளதேசம்
ஷகிப் அல்&ஹசன் (கேப்டன்), தமிம் இக்பால், இம்ருல் கேயஸ், ஜூனைட் சித்திக், ஷாரியார் நபீஸ், ரஹிபுல் ஹசன், முகமது அஷ்ரபுல், முஷ்பிகிர் ரகிம், நயீம் இஸ்லாம், மக்முதுல்லா, அப்துர் ரசாக், ருபெல் ஹூசைன், ஷபியுல் இஸ்லாம், நஸ்முல் ஹூசைன், சுரவாடி ஷூவோ.
கோப்பையை வெல்வோம் - ஸ்ரீகாந்த்
இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்...
வெற்றிக்கான அதிக வாய்ப்புகளை கொண்டுள்ள சிறந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி உலக கோப்பையை வெல்லும். தேர்வு குழு
கூட்டத்தில் எல்லா கோணங்களிலும் ஆலோசித்து அணியை முடிவு செய்தோம். பிட்ச் மற்றும் எதிரணிகளையும் கருத்தில் கொண்டு,
எல்லாவற்றையும் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய அணியை தேர்வு செய்து இருக்கிறோம்.
இந்தியாவில் விளையாடுகிறோம் என்பதை மறக்கவில்லை. இங்குள்ள பிட்ச்களில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகியவற்றில் சமமான திறமையுடன் டோனி தலைமையிலான இந்திய அணி விளங்குவதால் உலக கோப்பை
போட்டியில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.
நெருக்கடி
தற்போதைய இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடந்த 2 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில்
மட்டுமின்றி வெளிநாடுகளில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை அளித்து வருகிறது. உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் இந்த அணி சிறப்பாக செயல்பட்டு
உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறோம்.
இந்தியா மற்றும் துணை கண்டத்தில் விளையாடும் போது அணிக்கு கடும் நெருக்கடி இருக்கும். அணி தேர்வாளர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் இனிமேல் நெருக்கடி நிலவும். 1983&ம் ஆண்டு போல் இந்த அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும்.
ஏப்ரலில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இந்தியா வென்றால் அது தேர்வாளர்களுக்கும் என்றுமே மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணமாக அமையும். கிரிக்கெட் போட்டியில் எந்த வெற்றி கிடைத்தாலும் அது நமது நாட்டுக்கு பெருமை தான். அது ஏன் இந்த உலக கோப்பை போட்டியாக இருக்கக்கூடாது. இந்த நம்பிக்கை வீரர்களிடம் மட்டுமல்லாமல் நாட்டு மக்களிடமும் இருக்க வேண்டும்.
தொடக்க ஆட்டம்
உலக கோப்பை போட்டியில் இந்திய அணி பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. வங்காளதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். மிர்புரில் பிப்ரவரி 19&ந் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில்
இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணை
வருகிற 2011ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை இணைந்து நடித்தவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன. உலக கோப்பைப் போட்டியில் 14 அணிகள் பங்கேற்கின்றன.
ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், அயர்லாந்து, ஆலந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவில், இறுதிப் போட்டி, ஒரு அரை இறுதி, ஒரு கால் இறுதி உள்பட 29 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. ஒரு அரை இறுதி, ஒரு கால் இறுதி
உள்பட 12 ஆட்டங்கள் இலங்கையிலும், தொடக்க விழா, இரு கால் இறுதி உள்பட 8 ஆட்டங்கள் வங்காளதேசத்திலும் நடைபெறும்.
43 நாட்கள் நடைபெறும் போட்டிகள் மொத்தம் 13 மைதானங்களில் நடைபெறவுள்ளது. போட்டிக்கான கால அட்டவணை நேற்று மும்பையில்
வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐசிசி துணைத் தலைவரும், மத்திய ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தலைவருமான சரத் பவார், ஐசிசி செயல்
தலைவர் ஹாரூன் லோர்காட், போட்டி இயக்குநர் ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டி அட்டவணை
முதல் போட்டி பிப்ரவரி 19ம் தேதி மிர்பூர் நகரில் நடைபெறும். இதில் இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன.
பிற போட்டிகள் விவரம்..
பிப்.20- இலங்கை - கனடா (ஹம்பன்தோடா-இலங்கை)
பிப்.20 - கென்யா - நியூசிலாந்து (சென்னை)
பிப்.21 - ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
பிப்.22 - இங்கிலாந்து - ஆலந்து (நாக்பூர்)
பிப்.23 - கென்யா - பாகிஸ்தான் (ஹம்பன்தோடா)
பிப்.24 - தென்ஆப்பிரிக்கா - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.25 - வங்காளதேசம் - அயர்லாந்து (மிர்பூர்)
பிப்.25 - ஆஸ்திரேலியா நியூசிலாந்து (நாக்பூர்)
பிப்.26 - பாகிஸ்தான் - இலங்கை (கொழும்பு)
பிப்.27 - இந்தியா - இங்கிலாந்து (கொல்கத்தா)
பிப்.28 - ஆலந்து - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.28 - கனடா - ஜிம்பாப்வே (நாக்பூர்)
மார்ச் 1 - கென்யா - இலங்கை (கொழும்பு)
மார்ச் 2 - இங்கிலாந்து -அயர்லாந்து (பெங்களூர்)
மார்ச் 3 - கனடா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 3 - ஆலந்து - தென்ஆப்பிரிக்கா (மொஹாலி)
மார்ச் 4 - வங்காளதேசம் - மே. இ. தீவுகள் (மிர்பூர்)
மார்ச் 4 - நியூசிலாந்து - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
மார்ச் 5 - ஆஸ்திரேலியா - இலங்கை (கொழும்பு)
மார்ச் 6 - இந்தியா - அயர்லாந்து (பெங்களூர்)
மார்ச் 6 - இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா (சென்னை)
மார்ச் 7 - கனடா - கென்யா (டெல்லி)
மார்ச் 8 - நியூசிலாந்து - பாகிஸ்தான் (பல்லிகேலே)
மார்ச் 9 - இந்தியா - ஆலந்து (டெல்ல)
மார்ச் 10 - இலங்கை - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 11 - வங்காளதேசம் - இங்கிலாந்து (சிட்டகாங்)
மார்ச் 11 - அயர்லாந்து - மே. இ. தீவுகள் (மொஹாலி)
மார்ச் 12 - இந்தியா - தென்ஆப்பிரிக்கா (நாக்பூர்)
மார்ச் 13 - கனடா - நியூசிலாந்து (மும்பை)
மார்ச் 13 - ஆஸ்திரேலியா - கென்யா (பெங்களூர்)
மார்ச் 14 - வங்காளதேசம் -ஆலந்து (சிட்டகாங்)
மார்ச் 14 - பாகிஸ்தான் - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 15 - அயர்லாந்து - தென்ஆப்பிரிக்கா (கொல்கத்தா)
மார்ச் 16 - ஆஸ்திரேலியா - கனடா (பெங்களூர்)
மார்ச் 17 - இங்கிலாந்து - மே.இ. தீவுகள் (சென்னை)
மார்ச் 18 - நியூசிலாந்து - இலங்கை (மும்பை)
மார்ச் 18 - அயர்லாந்து - ஆலந்து (கொல்கத்தா)
மார்ச் 19 - வங்காளதேசம் - தென்ஆப்பிரிக்கா (மிர்பூர்)
மார்ச் 19 - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 20 - கென்யா - ஜிம்பாப்வே (கொல்கத்தா)
மார்ச் 20 - இந்தியா- மே.இ. தீவுகள் (சென்னை)
மார்ச் 23 - முதல் காலிறுதிப் போட்டி- மிர்பூர்
மார்ச் 24 - 2வது காலிறுதிப் போட்டி- கொழும்பு
மார்ச் 25 - 3வது காலிறுதிப் போட்டி- மிர்பூர்
மார்ச் 26 - 4வது காலிறுதிப் போட்டி - அகமதாபாத்.
மார்ச் 29 - முதல் அரை இறுதிப் போட்டி- கொழும்பு.
மார்ச் 30 - 2வது அரை இறுதிப் போட்டி- மொஹாலி
ஏப்ரல் 2 - இறுதிப் போட்டி - மும்பை
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “2011 உலக கோப்பை கிரிக்கெட் ஒரு கண்ணோட்டம்”
Post a Comment