Friday, December 31, 2010

2010-ல் நடந்தது என்ன?

நண்பர்களுக்கு வணக்கம். வி.ஏ.ஓ. மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்  வகையில் 2010&ல் நடந்த முக்கிய நிகழ்வுகள் இங்கு தரப்பட்டுள்ளது.  படித்து பயன்பெறுங்கள்.


டாப் 12 இன் வேர்ல்டு 2010

ஜனவரி 4: உலகிலேயே உயரமான கட்டிடம் புர்ஜ் துபாய், துபாய் நாட்டில் திறக்கப்பட்டது-. இதன்  உயரம் 800 மீட்டர். மேலும், 57 லிப்ட்டுகள், 8 எஸ்கலேட்டர்கள் உள்ளன. இந்த கட்டிடம் கட்ட  செலவான தொகை எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் கோடி ரூபாய்.

பிப்ரவரி 28:  சிலி நாட்டில் 8.8 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம். 1000 பேர் பலியானார்கள்.

மார்ச் 11: உலகின் முன்னணி கோடீஸ்வரர்களின் பட்டியலை அமெரிக்காவின் போபர்ஸ் பத்திரிகை  வெளியிட்டது. முதல் இடம் பிடித்தவர் மெக்சிகோ நாட்டின் பிரபல தொழில் அதிபர் கார்லோஸ்  சிலிம். பில்கேட்ஸ் 2வது இடம். முகேஷ் அம்பானி 4வது இடம்.

ஏப்ரல் 15:ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சிதறியதால் ஐரோப்பாவின் வான்வெளியில் கரும்புகை  மற்றும் சாம்பல் நிரம்பியது. இதனால் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நார்வே, அயர்லாந்து,  பின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளின் விமான சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

மே 6: நடந்த இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் எதர்கட்சியாக இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி  306 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் புதிய பிரதமராக அந்த கட்சியின்  தலைவர் டேவிட் கேமரூன் மே&12ல் பதவியேற்றார்.

ஜூன் 28: கனடாவின் தலைநகர் டொரண்டோவில் ஜி 20 மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க  இந்தியாவில் இருந்து சென்ற பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துப்  பேசினார்.

ஜூலை 28: துருக்கியில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குச் சென்ற தனியார்  விமானம் ஒன்று மலையில் மோதி நொறுங்கியது. 155 பேர் பலியானார்கள்.

ஆகஸ்ட் 24: மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 22 வயது மாடல் அழகி ஜினாமா நவரெட்டே உலக  அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செப்டம்பர் 9: அமெரிக்காவில் அவுட்சோர்சிங் பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு  ஒப்படைக்கும் கம்பெனிகளுக்கு வரிச்சலுகை கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா  அறிவித்தார். அமெரிக்காவில் உள்ள பல நிறுவனங்கள் வெளி ஆட்கள் மூலம் பணிகளை  செய்யும் (அவுட் சோர்சிங்) பொறுப்பை இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களிடம் (பீ.பீ.ஓ.)  ஒப்படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 4: சோதனைக்குழாய் முறையில் செயற்கை கருவுரும் முறையை கண்டுபிடித்த  இங்கிலாந்து விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்டுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.  வேதியியல் துறைக்கான நோபல் பரிசு, விஞ்ஞானி ரிச்சர்டுஹெக்குக்கு அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 7: உலகையே ஆட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு விக்கிலீக் இணையதளத்தை  நடத்திவரும் ஜூலியன் அசாங்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அமெரிக்க தூதரகங்கள்  செய்யும் தில்லுமுல்லுவை தனது இணையதளத்தில் வெளியிட்டு பகிரங்கப்படுத்தினார்.

டிசம்பர் 4: வியட்நாமில் நடந்த பூலோக அழகிப் போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த 20 வயது  இந்திய அழகி நிக்கோலா பாரியா வெற்றி பெற்றார்.

====

டாப் 12 இன் இந்தியா-2010

ஜனவரி 12: டெல்லியில் நடந்த 2009&ம் ஆண்டிற்கான இந்திராகாந்தி சமாதான விருது  வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்டது.

பிப்ரவரி 24: மத்திய ரெயில்வே பட்ஜெட் தாக்கல். பயணிகள், சரக்குக் கட்டணம் உயர்வு இல்லை.  உணவு பொருட்களுக்கு சரக்கு கட்டணம் குறைப்பு. இ&டிக்கெட், சேவைக்கு கட்டணம் குறைப்பு,  சுற்றுலா ரெயில் உள்பட புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டது.

மார்ச் 26: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு தொடர்பு உண்டு என்று சி.பி.ஐ.கோர்ட்டில்  முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அஞ்சுதாகுப்தா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

ஏப்ரல் 18: ஐ.பி.எல். கொச்சி அணியில் தன் காதலி சுனந்தா புஷ்கருக்கு ரூ.70 கோடி மதிப்புள்ள  பங்குகளை பெற்றுத்தர தனது பதவியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கிய மத்திய  வெளியுறவு மந்திரி சசிதரூர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மே 6: மும்பை தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்பிற்கு மும்பை  ஆர்தர்ரோடு சிறை வளாகத்தில் உள்ள தனிக்கோர்ட் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஜூன் 7: ஆயிரம் பேரை பலிகொண்ட போபால் விஷவாயு கசிவுக்கான தீர்ப்பு 26 ஆண்டுகளுக்கு  பிறகு கூறப்பட்டது. இந்த வழக்கில் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு முன்னாள் அதிபர்  ஆன்டர்சன் உள்பட 7 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு தலா 2 ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


ஜூலை 15: சென்னையைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் இந்திய ரூபாய்க்கான குறியீட்டை  வடிவமைத்தார். இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கிய தினம் இது.

ஆகஸ்ட் 7: மும்பை அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டன. இதில் ஒரு கப்பல்  மூழ்கியது. அதில் இருந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

செப்டம்பர் 30: அயோத்தியில் சர்ச்சைகுரிய பகுதியில் அமைந்துள்ள 2.7 ஏக்கர் நிலத்தை 3 சம பங்குகளாக பிரித்து அலகாபாத் ஹை கோர்ட் லக்னோ கிளை தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கு 60ஆண்டுகளாக நடந்தது

அக்டோபர் 9: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தம் இல்லாத உறுப்பு நாடாக 19  ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.

நவம்பர் 7: பீகாரில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்&பாரதீய ஜனதா கூட்டணி  அமோக வெற்றி பெற்றது. புதிய முதல்வராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ்  கட்சியும், ராஷ்டிரீய ஜனதாதள கட்சி&லோக் சன சக்தி கூட்டணியும் தோல்வியைத் தழுவின.

டிசம்பர் 8: ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும்  அதிகாரிகள் உள்பட 14 வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய  ஆவணங்களைக் கைப்பற்றினர்.

===

டாப் 12 இன் தமிழ்நாடு 2010

ஜனவரி 9: தமிழக பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல் (2010&2011) சமச்சீர் கல்வியை  அமல்படுத்தும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

பிப்ரவரி 6: முதல் அமைச்சர் கருணாநிதிக்கு சென்னையில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது.  நடிகர் அமிதாப்பச்சன் தலைமையில் ரஜினி, கமல் மற்றும் திரை உலகினர் திரண்டனர்.

மார்ச் 3: ஏழைமக்கள் வாழும் குடிசைகளுக்குப் பதில் 21 லட்சம் செலவில் இலவச காங்கிரீட்  வீடுகள் வழங்கும் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தை திருச்சியில் நடந்த விழாவில் முதல் அமைச்சர்  கருணாநிதி தொடங்கி வைத்தார்.

ஏப்ரல் 12: தமிழக சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில் மீண்டும், தமிழகத்தில் மேல்சபையைக்  கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேறியது. ஆதரவாக 155 ஓட்டுகளும், எதிராக 61  ஓட்டுகளும் பதிவாயின.

மே 16: பிரபல எழுத்தாளர் அனுராதாரமணன் சென்னையில் மாரடைப்பால் காலமானார்.

ஜூன் 23: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டில்  பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு கலைஞர் கருணாநிதி  செம்மொழி விருதை ஜனாதிபதி வழங்கினார். அன்று மாலை இனியவை நாற்பது என்ற பெயரில்  அலங்கார ஊர்திகளின் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. இந்த மாநாடு ஜூன் 27&ம் தேதி  வரை நடந்தது.

ஜூலை 13: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டைத்  தொடர்ந்து அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

ஆகஸ்ட் 17: தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க முதல்  அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.
செப்டம்பர் 22: உலகபிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழா  கோலகலமாக தொடங்கியது.

அக்டோபர் 18: தேனி மாவட்டம் பொட்டிபுரம் அருகே நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய  சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

நவம்பர் 12: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு உள்பட 17  சட்ட மசோதாக்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.

டிசம்பர் 7: தமிழகத்தில் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.500கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன

0 Responses to “2010-ல் நடந்தது என்ன?”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby