Thursday, January 27, 2011

விருதுகள் 2011

குடியரசு தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்கள் பற்றிய விவரம்.



பத்ம விருதுகள் தமிழ்நாட்டை சேர்ந்த 12 பேர் இந்த விருதுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

பத்மவிபூஷன் விருது

 பழம்பெரும் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் ஏ.நாகேஷ்வரராவ் (சினிமா), திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா, முன்னாள் தூதர் பிரஜேஷ் மிஸ்ரா, முன்னாள் கவர்னர் ஏ.ஆர்.கித்வாய், 13&வது நிதிக்குழு தலைவர் விஜய் கேல்கர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் (பொதுத்துறை), விப்ரோ கம்ப்யூட்டர் நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி (வர்த்தகம் மற்றும் தொழில்).

பத்மபூஷன் விருது

 சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.வி.சந்திரசேகர் (பரத நாட்டியம்), டாக்டர் சூரியநாராயணன் ராமச்சந்திரன் (அறிவியல் மற்றும் பொறியியல் துறை). பிரபல பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர், பழம் பெரும் இந்தி நடிகை வகிதா ரஹ்மான், பழம் பெரும் இந்திப்பட இசையமைப்பாளர் முகமது கயாம் (சினிமா), மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஷியாம் சரன் (அரசுப்பணி). மொத்தம் 31 பேர் இந்த விருதுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

பத்மஸ்ரீ விருது

தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன், தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் ஜெயராம் (சினிமா), எம்.கே.சரோஜா (பரத நாட்டியம்), எஸ்.ஆர்.ஜானகிராமன் (கர்நாடக இசைப்பாடகர்), கோவை நாராயணராவ் ராகவேந்திரன் (அறிவியல் மற்றும் பொறியியல்), மெக்கா ரபீக் அகமது மற்றும் கைலாசம் ராகவேந்திரராவ் (வர்த்தகம் மற்றும் தொழில்), டாக்டர்கள் சிவபாதம் விட்டல், மாதனூர் அகமது அலி (மருத்துவம்).
பிரபல நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான், மலையாள பட இயக்குனர் ஷாஜி கருன் (சினிமா), பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் (இசை) உள்பட 84 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவர்களில் 8 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.

பத்ம விருது அறிவிக்கப்பட்டு உள்ள மொத்தம் 128 பேரில் இந்தியாவின் முதல் புகைப்படக் கலைஞரான ஹோமாய் வியாரவல்லா உள்பட 31 பேர் பெண்கள்தான்.

0 Responses to “விருதுகள் 2011”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby