Sunday, December 19, 2010

புத்தாண்டே வருக..!

இமைகள் விலகி
விழிகள் திறந்து
பகைமை விலகி
நட்பு திறந்து
இருள் விலகி
வெளிச்சம் சூழ...
புத்தாண்டே வருக!

புத்துணர்ச்சியை தருக!
துன்பங்கள்
வாழ்க்கையை
தவிடுபொடியாக்க
வருவதில்லை..!
தாங்கும் நெஞ்சில்
வைரம் பாய்ச்சுவதற்கே!
வெயிலின் அருமை
நிழலில்தானே தெரியும்!
மலரில் வண்டு
தேன் குடிப்பதால்தான்
மகரந்தசேர்க்கையும்
நடக்கிறது...!
மழையில் நனைந்த
புற்கள் கூட
மனதை திறக்கும்
சாவி தான்..!
உன்னில்
கொட்டிக்கிடக்கும்
அற்புதங்களைத் தேடி
அலையும்போது!
காணக்கிடைக்காது போனாலும்,
கவலை கொள்ளத்
தேவையில்லை..!
மெல்ல வரும்&அது
சொல்லித்தரும்...
வாழ்க்கை என்னும்
அரிச்சுவடியை
அள்ளித்தரும்
பொக்கிஷமாய்...!
அதுதான் உன்
அனுபவங்கள்...
காலத்திற்கு தெரியும்
யாருக்கு
என்ன செய்ய
வேண்டுமென்று..!
நமக்கும்
அது
தெரிந்தால்தான் என்ன?
என்று உங்கள்
மனம் சொல்லும்..!
விடைதேடிச்
செல்லுங்கள்
விடுதலைக்காக..!
உங்களை&நீங்கள்
வெல்லும் காலம்
வந்துவிட்டது
2011.
இப்போது
உங்கள் மனம்
சொல்லும்&நீ
பத்தோடு வரும்
பதினொன்றல்ல என்று..!
அப்படியானால்...
பத்துக்குப் பிறகு
புதிதாய் சேரும்
அந்த
ஒன்று தான் நீங்கள்..!
அது சொல்லும் &நீங்கள்
Ôஎப்போதும் நம்பர் ஒன்Õஎன்று!
-& பாரதி சங்கர், முக்காணி.

1 Responses to “புத்தாண்டே வருக..!”

ராஜா said...
December 23, 2010 at 11:56 PM

adda arumai


Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby